Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 2, 2017

நடிகர் சங்க கிரிக்கெட்போட்டி பீட்டா விஷால் அழைப்பு..! தமிழக இளைஞர்கள் புறக்கணிக்க முடிவு..!


வரும் ஏப்ரல் 17ல் சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது.

கமல்,ரஜினி, விஜய், விக்ரம், விஷால் போன்ற 5 கோடி முதல் 50 கோடி வரை மட்டுமே கஷ்டப்பட்டு உழைத்து நடித்து கூலி வாங்கி அடுத்த வேளை உணவுக்கே கஷ்டப்படுவர்கள்.

தற்போது ஒதுங்க நிழல் இன்றி, கொளுத்தும் வெய்யிலில் வாடும் திக்கற்ற கலைஞர்களுக்கு சங்கக் கட்டிடம் கட்ட  நிதி திரட்ட நடத்தப்படுகிறது கிரிக்கெட் போட்டி.

வந்து எங்கள் பண்பட்ட விளையாட்டை, பணம் கொடுத்து பாருங்கள் மனைவி மக்களை மறந்து கூக்குரல் எழுப்பி எம்மை உற்சாகப்படுத்த வாருங்கள், வாருங்கள் என்று பீட்டா விசாலின் நடிகர் சங்கம் அழைக்கின்றது.

300 ரூபாய் சம்பளம் வாங்கும் ரசிகனிடம் காசுபறிக்க பார்க்கும் நடிகர் சங்கம் 30 கோடி சம்பளம் வாங்கும் நடிகனிடம் பணம் கேட்க மறுப்பது ஏன்?

.விட்டால் இவர்கள் வீட்டு மளிகை சாமான்கள் வாங்குவதற்கு கூட ரசிகனிடம் பணம் கேட்பார்கள் போல.

ரஜினி, கமல்ஹாசன், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் இவர்களிடம் இல்லாத பணமா நம்மிடம் இருக்கின்றது?

100 ரூபாய் கொடுத்து படம் தான் பார்க்க முடியும் ரசிகனால்.

தமிழ் நடிகர்களின் சம்பளம் ஒரு படத்திற்கு 5 கோடி முதல் 50 கோடி வரை. சராசரியாக 10 கோடி என்று வைத்துக்கொள்வோம்.

மாதம்  70ஆயிரம் ருபாய் சம்பளம் வாங்கும் ஒரு IT ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 125 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 250 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

மாதம் 25 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு அரசுஊழியர் 10 கோடி சம்பாதிக்க 333 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

நம் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயி 10 கோடி சம்பாதிக்க 760 வருடம் உழைக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு 300 ரூபாய் வருமானம் பெறும் கூலி தொழிலாளி 10 கோடி சம்பாதிக்க 1000 ஆண்டுகள் உழைக்க வேண்டும்.

திரைப்பட நடிகர், நடிகைகள் பயன்படுத்தும கார்களின் விலை 50 லட்சத்திலிருந்து 5 கோடி வரை.

படப்பிடிப்புதளங்களில் இவர்களது சொகுசு வாழ்க்கை என்பது நமது கேளிக்கை கடவுள் இந்திரன் கூட அனுபவிக்காது.

வெளிநாட்டு மது, நட்சத்திர ஹோட்டல்உணவு, இரவு நேர கேளிக்கை, ஒப்பனைக்கு இருவர், உடை அணிவிக் இருவர், குடைபிடிக்க ஒருவர், கொஞ்சம் வியர்த்தால் கேரவேனில் ஓய்வு.

இவர்கள் ஒரு நேரம் நட்சத்திர ஓட்டலில் உணவு உண்ணும் தொகை நம் விவசாயிகளின் ஒரு மாத உணவுச்செலவு.

ஒரு ஆண்டில் 3 படங்களில் நடித்து 50 கோடி ரூபாய்சம்பாதித்து10 கோடி வரிஏய்ப்பு செய்து 5000 ரூபாய்க்கு ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள்வாங்கி கொடுத்து விளம்பரம் தேடுபவர்கள்.

பல முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பல கோடிகளில் கட்டிடங்கள்கட்டுவது இவர்களிடம் விற்பதற்காக தான்.

நாம் திரைப்படம் பார்க்க செலுத்தும் பணம் தான் இவர்களுக்கு சம்பளமாக செல்கிறது.

மேற்கூறிய இந்த ஏழைகளின் நடிகர்சங்கம் 22 கோடி ரூபாய் கடனில் தவிக்கிறதாம். அதை அடைக்க இவர்கள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி ஒரு டிக்கெட் 1000 ரூபாய்க்கு நம்மிடம் விற்று கடனை அடைக்க போகிறார்களாம்.

புயல் வெள்ளத்தில்நம் மக்கள் அனைத்தையும் இழந்து நிர்வாணமாய் நின்றபோது நடிகர் சங்கம் உதவி செய்யாது என்றுவெளிப்படையாக சொன்ன இவர்கள் தற்போது நம்மிடம் கிரிக்கெட் மூலமாக வசூல் என்று வருகிறார்கள்.

ஆகையால் மானமுள்ள நம் மக்கள் இந்த நட்சத்திரகிரிக்கெட் போட்டியை புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு தமிழக இளைஞா்கள் கூறிவருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.