சமீப காலமாக தமிழக அரசியலில் தனது ஆதங்கத்தை தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசனை பொறுக்கி புகழ் சுப்பிரமணியசுவாமி கடும் வார்த்தைகளால் திட்டியுள்ளார்
ஜல்லிக்கட்டு போராட்ட நேரத்தில் தமிழர்களை ‘பொறுக்கிகள்’ எனத் தொடர்ந்து திட்டி வந்தார் சு சாமி. இதைக் கண்டித்து ட்விட் போட்டிருந்தார் கமல்ஹாஸன்.
பதிலுக்கு கமல்ஹாஸனையும் ‘பொறுக்கி’ என்று குறிப்பிட்டார் சாமி. இதற்கு பதிலளித்த கமல், ‘சாமியின் கேவலமான பதிவுகளுக்கு பதில் தர விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.
மேலும் காமராஜ், அண்ணா, ராஜாஜி எல்லாம் நீ சொன்ன ‘பொறுக்கி’ இனத்தில் இணையற்ற தலைவர்கள். மோதி மிதித்துவிடு பாப்பா..’ என்று கூறியிருந்தார்.
இப்போது மீண்டும் கமலை சு சாமி வம்புக்கு இழுத்துள்ளார். சு. சாமி ட்விட்டரில் ஒருவர், “எப்படியாவது கமல் ஹாஸனை சமாதானப்படுத்தி பாஜகவில் இணைத்துவிடுங்கள். அவரைப் போன்ற ஒருவர் அக்கட்சிக்குத் தேவை”, என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள சு சாமி, “எனக்கு பாஜக பற்றி எதுவும் தெரியாது. ஆனால் கமல்ஹாஸன் என்ற முதுகெலும்பில்லாத கோழையை, சுயதம்பட்ட முட்டாளை கடுமையாக எதிர்க்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
சு சாமியின் இந்த பதில் கட்சி பேதம் தாண்டி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.