February 26, 2017
சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சரவை பதவி வழங்க வேண்டும் என ஆலோசனை.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சரவை பதவி வழங்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அரசாங்க அமைப்பை மாற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் யோசனை முன்வைத்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, வடக்கின் தமிழ் மக்களின் பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சியாகும். ஆனாலும் அவர்களுக்கு அரசாங்க கட்டுப்பாட்டில் இணைவதற்கு உள்ள சந்தர்ப்பம் தவிர்க்கப்படுகிறது. இதன்காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கும் குழுவாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மாறியுள்ளதென ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அரசாங்க கட்டுப்பாட்டிற்குள் இணைவதன் ஊடாக வடக்கு பிரச்சினைகள் தொடர்பில் சிறப்பான தீர்ப்பு பெற்றுக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எப்படியிருப்பிருப்பினும் இந்த யோசனை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாத்திரம் அல்ல. எந்தவொரு கட்சி அதிக ஆசனங்களை வெற்றிக் கொண்டிருந்தால் அந்த கட்சிக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சு பதவி ஒன்று வழங்கப்பட வேண்டும் என அவர் யோசனை முன்வைத்துள்ளார்.
அதற்கு மாற்று யோசனையாக மாகாண சபை முதலமைச்சர்களை அமைச்சரவையுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சரவை பதவி வழங்க வேண்டும் என ஆலோசனை.
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 26, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 26, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.