Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 28, 2017

மத்திய அரசின் விளக்கத்தை நிராகரித்தனர் நெடுவாசல் மக்கள்: மாநிலம் தழுவிய போராட்டமாக மாற்றப்போவதாக அறிவிப்பு


நெடுவாசல்போராட்டத்தை மாநிலம் தழுவிய அளவில் மாற்றப்போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மக்கள் நடத்தி வரும் போராட்டம் 13வது நாளாக நீடிக்கிறது. முற்றுகை போராட்டம், மனித சங்கிலி, வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியது என தொடர் போராட்டம் நடத்தப்போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். டெல்டா மாவட்டங்களை பாதிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாகும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை போலவே நெடுவாசல் மக்கள் போராட்டத்தையும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரத்திலும் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.