Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 20, 2017

ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.. கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த சி.ஆர்.சரஸ்வதி


தொலைபேசி மூலம் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி புகார் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய தொலைபேசிக்கு ஏராளமானோர் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுப்பதாக அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவை அடுத்து சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவரே முதல்வராக பதவி ஏற்க காய் நகர்த்தி வந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதால். அது நிறைவேறாமல் போனது. இந்நிலையில் ஜெயலலிதாவின் ஆதரவாளரான சி.ஆர்.சரஸ்வதி அவரது மறைவிற்கு பின்னர் சசிகலாவின் ஆதரவாளராக மாறியுள்ளார்.

இந்நிலையில், சி.ஆர்.சரஸ்வதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் அளித்துள்ளார். அந்த மனுவில், இரவு 10 மணிக்கு மேல் ஏராளமானோர் என்னுடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுகின்றனர்.'

மேலும், ஆபாசமாகவும் பேசுகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து மட்டுமில்லாமல், வெளி மாநிலங்களிலிருந்து என்னை தொடர்பு கொண்டு திட்டுகிறார்கள். தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி நான் பேட்டி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆபாசமாக பேசி வருகிறார்கள்.
அதேபோல் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா, மற்றும் நடிகை விஜயசாந்தி ஆகியோருக்கும் மிரட்டல் வருகிறது. போலீசார் இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.