Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 5, 2017

கருவை சிதைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட நந்தினி! வளர்ப்பு சரியில்லை என்று சொன்ன நிர்மலா பெரியசாமி!


அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது பெண் நந்தினி என்பவரை காதலித்து கர்ப்பமாக்கிய இந்து முன்னணி அமைப்பின் ஒன்றியச் செயலாளர் மணிகண்டன், கருவை கலைத்துவிடும் படி கூறி இருக்கிறார்.

அதற்கு நந்தினி மறுக்கவே, ஒன்னறை மாத கர்ப்பிணியாக இருந்த நந்தினியை அழைத்து, 3  நண்பர்களுடன் இணைந்து, கூட்டு பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் கருவை பிய்த்து எடுக்க முயன்றுள்ளனர். இதில் அதிக ரத்தம் கொட்டி அந்த பெண் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது இரண்டு கைகளையும் கட்டி, கிணறு ஒன்றிற்குள் வீசி எரிந்துள்ளனர்.  இறந்து 11 நாட்களுக்கு  புளுக்களுடன் நந்தினி உடலில்  மீட்கப்பட்டது.

இந்த விவகாரம் கடும் அதிர்ச்சியை  ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, முன்னாள் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி, ஒரு இடத்தில் அந்த சிறுமியின் வளர்ப்பு சரியில்லை என்றார்.

இது பெரும் சர்ச்சையாக அது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த குற்றவாளிக்கு உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற அவர், அதே நேரம் தனது பெண் பிள்ளை ஒருவரை காதலித்து, கர்ப்பமானது கூட தெரியாமல் அவரது பெற்றோர் இருந்தது தவறு தான் என்று தனது வாதத்தை நியாயப்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.