Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 11, 2017

ஒ.பி.எஸ்சை ஆதரித்து அ.தி.மு.க தீர்மானம் : பிள்ளையார்சுழி போட்டது குடியாத்தம்!


தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. பன்னீரின் அதிரடி நடவடிக்கையால் அ.தி.மு.க.,இரண்டாக பிரிந்துள்ளது.

எம்எல்ஏக்கள் பலர் என்னிடம் உள்ளனர் என சசிகலா கூறி வருகிறார். சட்டசபையில் பலத்தை காட்டுவேன் என பன்னீர் கூறிவருகிறார்.

பதவியை காப்பாற்ற பல எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் சசிகலாவை ஆதரித்து வருகின்றனர். ஆனால், தமிழக முழுவதும் சசிகலாவை முதல்வர் பதவியில் வைத்து பார்க்கவே விரும்பவில்லை என அ.தி.மு.க.,வின் அடிமட்ட தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், குடியாத்தம் நகர அ.தி.மு.க.,செயலாளர் பழனி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

ஒரு நகர அ.தி.மு.க., நிர்வாகிகள், சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி மற்ற நகர, மாவட்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளனர் என அ.தி.மு.க.,விசுவாசிகள் கருத்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.