February 25, 2017
தலைமைச் செயலாளர் – ஸ்டாலின் கூட்டு? ஜெயலலிதா படங்கள் அகற்றம்?
தி இந்து ஆங்கில இதழில் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி விரிவாக இடம் பெற்றுள்ளது. அதில், தலைமைச்செயலகம், அமைச்சர்களின் அறைகள், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் ஜெயலலிதா படங்கள் இருப்பதை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளதால், ஜெயலலிதாவின் படங்களை அகற்றுவதோடு, அவர் பெயரில் உள்ள அரசு திட்டங்களுக்கு மாற்று பெயர் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் பேசியுள்ளதாகவும், அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். கிரிஜா வைத்தியநாதனை பொறுத்தவரை அவர் நியமனத்தில் பா.ஜ.க.வின் பின்னணி இருப்பதாக சந்தேகப்படுகிறது.
பன்னீர் செல்வத்திற்கு பா.ஜ.க. ஆதரவு அளித்து வருவதாக கூறப்படும் நிலையில், அவர் முதலமைச்சராக இருந்த போது தான் கிரிஜா வைத்தியநாதன் அவசர அவசரமாக நியமிக்கப்பட்டார்.
கிரிஜா வைத்தியநாதன் பா.ஜ.க பிரமுகர் எஸ்.வி.சேகரின் அண்ணன் மனைவி ஆவார். எனவே ஸ்டாலின் தலைமைச் செயலாளர் கூட்டு எடப்பாடி அரசுக்கு எதிராக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தலைமைச் செயலாளர் – ஸ்டாலின் கூட்டு? ஜெயலலிதா படங்கள் அகற்றம்?
Reviewed by மறத்தமிழன்
on
February 25, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 25, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.