February 15, 2017
ஒரே காரில் சசிகலா, இளவரசி.. தனி காரில் சுதாகரன்.. மூவரும் பெங்களூர் பயணம்
சசிகலா போயஸ் இல்லத்திலிருந்து பெங்களூர் நீதிமன்றம் நோக்கி இன்று காலை 11.45 மணியளவில் காரில் புறப்பட்டார். சசிகலாவும், இளவரசியும் ஒரே காரில் பயணித்த நிலையில், சுதாகரன் வேறு காரில் புறப்பட்டுள்ளார்.
பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக, அதிமுக பொதுச்செயலர் சசிகலா அவரது அண்ணி இளவரசி இருவரும் ஒரே காரில் செல்லும் நிலையில் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மட்டும் வேறு காரில் பயணிக்கிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு சரணடைய கால அவகாசம் தர முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று கூறிவிட்ட நிலையில், சசிகலா போயஸ் இல்லத்திலிருந்து பெங்களூர் நீதிமன்றம் நோக்கி இன்று காலை 11.45 மணியளவில் காரில் புறப்பட்டார்.
சசிகலாவும், இளவரசியும் ஒரே காரில் பயணித்த நிலையில், சுதாகரன் வேறு காரில் புறப்பட்டுள்ளார். முன்னதாக சசிகலா போயஸ் இல்லத்தில் வைத்து ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு மெரினாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்று அங்கும் அஞ்சலி செலுத்தினார். பிறகு ராமாவரத்தில் எம்.ஜிஆர். இல்லத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார்.
மாலை 4 மணி முதல் 5 மணிக்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஒசூர் ரோட்டில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு சசி கொண்டு செல்லப்படுவார் என்று கூறப்படுகிறது. இங்குதான் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்புக்கு பிறகு 21 நாட்கள் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் அடைக்கப்பட்டிருந்தனர். அதேநேரம், பெங்களூர் சிறையில் சசிக்கு முதல் வகுப்பு சிறை கோரப்பட உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே காரில் சசிகலா, இளவரசி.. தனி காரில் சுதாகரன்.. மூவரும் பெங்களூர் பயணம்
Reviewed by மறத்தமிழன்
on
February 15, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 15, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.