Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 10, 2017

ஆளுநர் அதிரடி.. தலைமைச் செயலாளர், டிஜிபி, உளவுத்துறை ஐஜி, கமிஷனருடன் விறுவிறு ஆலோசனை!


இன்று இரவே ஆட்சி கலைப்பா!!  ஆளுநர் அதிரடி.. தலைமைச் செயலாளர், டிஜிபி, உளவுத்துறை ஐஜி, கமிஷனருடன் விறுவிறு ஆலோசனை!

தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், உளவுத்துறை ஐஜி தாமரைக்கண்ணன் உள்ளிடோருடன் ஆளுநர் வித்யாசகர் ராவ் திடீரென ஆலோசனை நடத்தினார்.

தமிழக அரசின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோருடன் தமிழக ஆளுநர் இன்று திடீரென ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின் போது தமிழக சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. ஆளும் அதிமுக கட்சி முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தலைமையில் இரண்டாக உடைந்துள்ளது.

தற்போதைய முதல்வர் ஓபிஎஸ், அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா இருவரும் நேற்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினர். இந்த நிலையில் இன்று தமிழக அரசின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன் உளவுப் பிரிவு கூடுதல் தலைவர் தாமரைக் கண்ணன், சென்னை போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோரை ஒரு சேர அழைத்து ஆளுநர் ஆலோசனை நடத்தினார்.

இச்சந்திப்பின் போது தமிழக சட்டம் ஒழுங்கு நிலைமைகள் குறித்து அனைவரிடமும் ஆளுநரிடம் கேட்டறிந்தார். ஒரே சமயத்தில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசின் உயர்அதிகாரிகளை ஆளுநர் அழைத்து ஆலோசனை நடத்தியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. விரைவில் உள்துறை அமைச்சருக்கு ஒரு விரிவான அறிக்கையை ஆளுநர் அனுப்பவுள்ளார். இதனால் சட்டம் ஒழுங்கு குறித்தும், அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்தும் அவர் விளக்கம்கேட்டதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.