February 23, 2017
காரில் நடந்தது என்ன? நடிகை பாவனா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்
காரில் நடிகை பாவனா கடத்தப்பட்டபோது என்ன நடந்தது என்பது குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக 6 பேர் கொண்ட கும்பல் தன்னை காருக்குள் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து புகைப்படம், வீடியோ எடுத்ததாகக் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை பதிந்துள்ள எப்.ஐ.ஆரில் கூறியிருப்பதாவது:
நடிகை பாவனா கடந்த வெள்ளிக்கிழமை இரவு படப்பிடிப்பு முடித்து தனது காரில் கொச்சியிலிருந்து திருச்சூருக்கு இரவு 7 மணிக்குக் கிளம்பினார். அவர் கொச்சியில் பனம்பில்லி நகரில் உள்ள தனது நண்பர் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அவருக்கு லால் கிரியேஷன்ஸ் எனும் நிறுவனத்தின் மூலமாக கார் வழங்கப்பட்டிருந்தது. பயணத்தின்போது கார் ஓட்டுநர் மார்ட்டின் தொடர்ந்து எஸ்எம்எஸ்களை யாருக்கோ அனுப்பியுள்ளார். அப்போது, உணவு வழங்கும் வேன் ஒன்று பாவனாவின் காரைப் பின்தொடர்ந்துள்ளது.
நெடும்பசேரி விமான நிலைய சந்திப்பின் அருகே இரவு 8.30 மணி அளவில் அந்த வேன் காரின் மீது மோதியது. அதையடுத்து கார் நிறுத்தப்பட்டது . அப்போது, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட A-2, A-3 ஆகிய இரண்டு பேரும் காருக்குள் புகுந்து பாவனாவின் வாயை பொத்தியுள்ளனர். உடனடியாக அவரிடமிருந்து செல்ஃபோன் பிடுங்கப்பட்டது. சத்தம்போட்டால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
கார் கலமசேரி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது ஒருவர் காரிலிருந்து இறங்கியுள்ளார். பிறகு இன்னொருவர் காருக்குள் புகுந்துள்ளார். பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்ய அவர் மற்றவர்களுக்கு உதவியுள்ளார்.
அதன் பிறகு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட A-5, A-6 காரினுள் நுழைந்துள்ளனர். அப்போது சிறிது தூரம் சென்றவுடன் ஒரு வீட்டிற்குள் கார் நுழைந்தது. அங்குதான் வழக்கின் முக்கியக் குற்றவாளியான பல்சர் சுனில் இருந்துள்ளான். சிறிது நேரத்திலேயே அவன் காரினுள் முகத்தை மூடியபடி நுழைந்தான். அதுவரை காரை ஓட்டிவந்த மார்ட்டினை இறக்கிவிட்டு பல்சர் சுனில் காரை ஓட்ட ஆரம்பித்தான்.
காகநாடு பகுதிக்குள் சென்ற பல்சர் சுனில் ஆள் அரவம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி பாவனாவை பலாத்காரம் செய்துள்ளான். மேலும், பாவனாவைப் பல்வேறு கோணங்களில் ஃபோட்டோ மற்றும் வீடியோ எடுக்க முயற்சி செய்துள்ளான். அதற்கு பாவனா சம்மதிக்காததால் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளான். அதன்பிறகு காரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் பாவனா.
-இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காரில் நடந்தது என்ன? நடிகை பாவனா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்
Reviewed by மறத்தமிழன்
on
February 23, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 23, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.