February 26, 2017
ஜெயலலிதாவின் இறப்புக்கு திமுகவின் சதியே காரணம்.. புது குண்டு போடும் தம்பிதுரை
ஜெயலலிதாவின் இறப்புக்கு திமுகவின் சதி தான் காரணம் என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் இறப்புக்கு திமுகவின் சதி தான் காரணம் என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை
தெரிவித்துள்ளார்.அதிமுகவை ஒழிக்க திமுக மறைமுகமான சதிகளை செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சசிகலாவின் தீவிர ஆதரவாளரும் அதிமுக எம்பி மற்றும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெயலலிதாவின் இறப்புக்கு திமுகவின் சதிதான் காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் பேசியதாவது, திமுகவினர் திட்டமிட்டே, வேண்டுமென்றே அதிமுகவை ஒழிப்பதற்காக, மறைமுகமான சில சதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். ஜெயலலிதா மீது எந்த குற்றமும் கிடையாது.'
இவர்கள்தான் வழக்கு தொடர்ந்து, எப்படியாவது ஜெயலலிதா சிறைக்கு செல்ல வேண்டும். சிறைக்கு சென்றால் அந்த காலக்கட்டத்திலேயே அவர் இறந்துவிடுவார் என்று திட்டமிட்டது. திமுக சதிதான் ஜெயலலிதாவின் இறப்புக்குக் காரணம். இவ்வாறு சசிகலா தரப்பு ஆதரவாளரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை கூறினார்.
ஜெயலலிதாவின் இறப்புக்கு திமுகவின் சதியே காரணம்.. புது குண்டு போடும் தம்பிதுரை
Reviewed by மறத்தமிழன்
on
February 26, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 26, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.