Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 7, 2017

ஐயோ!! பாவம் ரசிகர்கள் ஐயோ பாவம் : பீட்டா ரஜினி இன்னும் ஏமாற்றுகிறார்,


பாட்சா படத்தில் ஆரம்பித்த அரசியல் அல்வா, இதோ உடல்நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டு தளர்ந்து போன நிலையிலும் இன்னும் தனது படத்தை ஓடவைக்க மீண்டும் கிலோ கணக்கில் அல்வா கிண்டி கொடுத்திருகிறார்.

மாணவச் செல்வங்கள் அனைவரும் தூக்கி எறிந்துவிட்ட நிலையில், இம்முறை ரஜினி அல்வாவில் சிக்கியிருப்பது திருச்சி ரசிகர்கள்.

இந்த வார இதழ் ஒன்றில் திருச்சி ரசிகர் மன்ற நிர்வாகிகள் அளித்த பேட்டி பகீர் என்றது. அதாவது ரஜினி தலைமை ரசிகர் மன்றத்தில் இருந்து அவர்களுக்கு ஒரு கடிதம் போயிருக்கிறது.

விரைவில் உங்களை தலைவர் ரஜினி சந்திக்கப் போகிறார். பெரிய முடிவு ஒன்றை அறிவிக்கப் போகிறார் ஆயத்தமாக இருங்கள்..! இதுதான் அந்த கடிதம்.

இது போதாதா? ஏமாளித் தமிழனுக்கு நம்பித் தொலைத்து விட்டான். கோடி பேனர் எல்லாம் லட்சக் கணக்கில் தயார் படுத்தி விட்டார்கள்.

தலைவர் அரசியலுக்கு ஆயத்தமாகி விட்டார். விரைவில் ராகவேந்திரா மண்டபத்தில் எங்களை சந்திக்கப் போகிறார்.

அப்போது அரசியல் என்ட்ரி குறித்துப் பேசுவார். ரஜினி தான் அடுத்த முதல்வர் என்கிறார்கள் அப்பாவியாக. அடப் பாவிங்களா..இன்னுமா அவரை நம்புறீங்க..?

தமிழ் நாட்டுக்கு  சூப்பர்ஸ்டார் இப்போ ஒருத்தர் மட்டும் இல்லை ரஜினி. ரசிகர்களே.. லட்சக் கணக்கில் சூப்பர்ஸ்டார்கள் தோன்றிவிட்டார்கள்.

மெரீனா புரட்சி, மதுரை தமுக்கம் புரட்சி, கோவை கொடீசியா புரட்சி, சேலம் நெல்லை, திருச்சி என ஜல்லிக்கட்டுப் போரில் பங்கு பெற்ற அத்தனை மாணவர்களும் இன்று சூப்பர்ஸ்டார்கள் தான். அத்தனை இளைஞர்களும் இளைய தளபதிகள் தான்.

திருந்துங்கப்பா..!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.