February 22, 2017
ஓபிஎஸ் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் கட்சியில் சேர்ப்போம்.. இறங்கி வரும் சசிகலா தரப்பு!
மன்னிப்பு கடிதம் கொடுத்தால் ஒ.பி.எஸ் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என தேனி அதிமுக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுகவில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று சசிகலா தரப்பு தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டது.
சசிகலாவிற்கு எதிராக சராமரி குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார் ஓ.பன்னீர் செல்வம். தான் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாகவும் கூறினார். பன்னீர் செல்வத்தின் பேட்டி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இதனையடுத்து அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளவுபட்டது. இதையடுத்து முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார்.
ஆனாலும் கட்சியினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஓபிஎஸ் ஆதரவு குறையவில்லை. மக்கள் ஆதரவு அமோகமாக இருந்தது. இந்நிலையில் மேலும் சசிகலாவின் எதிர்ப்புகளை தனக்கு சாதகமாக அறுவடை செய்ய பன்னீர்செல்வமும், தீபாவும் திட்டமிட்டு வரும் பிப்ரவரி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளனர்.'
இதனால் சசிகலா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் தேனியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன், மறப்போம், மன்னிப்போம் என்ற வகையில் ஒ.பன்னீர்செல்வம் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்றார்.
ஓபிஎஸ் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் கட்சியில் சேர்ப்போம்.. இறங்கி வரும் சசிகலா தரப்பு!
Reviewed by மறத்தமிழன்
on
February 22, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.