Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 23, 2017

விரைவில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்யநாதனுக்கு கல்தா


தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மாற்றம்? நிதித்துறை செயலர் சண்முகத்துக்கு வாய்ப்பு?

தமிழக அரசின் தற்போதைய தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் மாற்றப்பட்டு புதிய தலைமைச் செயலராக நிதித்துறை செயலர் சண்முகம் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மிழக அரசின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் விரைவில் மாற்றப்படலாம் என தெரிகிறது. புதிய தலைமைச் செயலராக நிதித்துறை செயலர் சண்முகம் விரைவில் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

கிரிஜா வைத்தியநாதன்
அப்போது புதிய தலைமை செயலாளர் பதவிக்கான பட்டியலில் கிரிஜா வைத்தியநாதன், சண்முகம் பெயர்கள் அடிபட்டன. பின்னர் மத்திய அரசு கிரிஜா வைத்தியநாதனை தேர்வு செய்து நியமித்தது.

எடப்பாடி, சசிகலா குடும்பம்
தற்போது புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார். அதேநேரத்தில் சசிகலா குடும்பத்தினரும் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

தலைமை செயலராக சண்முகம்?
இந்த நிலையில் நிதித்துறை செயலராக இருக்கும் சண்முகத்தை புதிய தலைமைச் செயலராக நியமிக்கலாம் என்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 1985-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாவார் சண்முகம்.

திமுக ஆட்சியில் நியமனம்
திமுக ஆட்சிக் காலத்தின் இறுதியில் நிதித்துறை செயலராக சண்முகம் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து நிதித்துறை செயலராகவே நீடித்து வந்தார் சண்முகம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.