Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 26, 2017

வீரப்பன், ஆட்டோ சங்கா் பிறந்தநாளை அரசு கொண்டாடுமா! இளங்கோவன் காட்டம்!


உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பிறந்தநாளை இன்று கொண்டாடினால்,

சந்தனக் கடத்தல் வீரப்பன், ஆட்டோ சங்கர் ஆகியோரின் பிறந்தநாள்களைக் கொண்டாட வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகளாக உச்ச நீதிமன்றதால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்த நாளை, கடந்த வெள்ளிக்கிழமை தமிழக அரசும், அதிமுகவினரும் கொண்டாடினர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 69 லட்சம் மரக்கன்றுகள் நடுவது, மருத்துவத்துறை சார்பில் 690 சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துவது போன்றவற்றை செயல்படுத்தி ஜெயலலிதா பிறந்தநாளை அரசு விழா போல் கொண்டாடினார்.

அது அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியா்களாலும் கொண்டாடப்பட்டுள்ளது.

குற்றவாளியின் பிறந்த நாளை அரசு விழா போல் கொண்டாடுவதா என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்,

பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், குற்றவாளிகளான ஜெயலலிதா, சசிகலா ஆகியோரை முன்னிலைப்படுத்தும் விதமாக ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது.

இந்த விழாவில் தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டது சட்டவிரோதமாகும்.

இந்தக் தவறான முன்னுதாரணம் தொடருமேயானால் வரும் காலங்களில் சந்தன கடத்தல் வீரப்பன், ஆட்டோ சங்கர் போன்ற குற்றவாளிகளின் பிறந்த நாள்களையும் அரசு விழாவாக கொண்டாட வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே தமிழக ஆளுநர் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.