Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 23, 2017

அநாகரீகமாக நடந்துக் கொண்ட காவலரை அடித்து துவைத்த பெண்!


அகமதாபாத்: குடிபோதையில் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட ஓதவ் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டரை அப்பெண் அடித்து துவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தக்கர்நகரில் சாலையோரம் காய்கறிக் கடை வைத்திருக்கும் அப்பெண்ணிடம் சில்மிஷம் செய்த காவலரை கன்னத்தில் அறைந்து, சீருடையில் இருந்த அவரை தரதரவென இழுத்து அடித்ததை அங்கிருந்த பொதுமக்கள் அப்பெண்ணை ஊக்குவித்தனர்.






குடிபோதையில் தள்ளாடிக் கொண்டிருந்த காவலரை அப்பெண் தாக்கிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் அம்ரித்ஜி கதுஜி என்பவர் மீது காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அம்ரித்ஜியை பாபுநகர் காவல் துறையினர் கைது செய்து, குடிபோதையில் தடையை மீறிய குற்றத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அம்ரித்ஜி உடனடியாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது அவரை அடித்த பெண்ணை தேடி வருவதாகவும், அவர் அளிக்கும் புகாரின் அடிப்படையில், காவலர் மீது பாலியல் தொடர்பான வழக்குப்பதிவு செய்யவிருப்பதாகவும் மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். ராஜேந்திர பூங்கா புறவழிச்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீராக்க சப்-இன்ஸ்பெக்டர் அம்ரித்ஜி அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். அளவுக்கு அதிகமாக குடித்திருந்த காவலர் காய்கறி வியாபாரம் செய்யும் பெண்ணை சீண்டி அவரிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த அப்பெண், காவலர் என்றும் பாராமல் சட்டையை பிடித்து கீழே தள்ளி, 7 முறை கன்னத்தில்விளாசியுள்ளார். அவரது பேன்ட்டை உருவி இந்த சம்பவம் சுமார் 20 நிமிடங்களுக்கு வீடியோவில் பதிவாகியிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறைக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக சப்-இன்ஸ்பெக்டர் நடந்துக் கொண்டார் என கூடுதல் காவல் ஆணையர் வகிலா கூறியுள்ளார். இதேபோன்று கடந்த 2015ஆம் ஆண்டு மணிநகர் காவல்துறை அதிகாரி ஒருவர் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்ட வீடியோ வெளியாகி அவர் கைது செய்யப்பட்டு பின் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்று அவர் கூறியுள்ளார்.






No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.