இன்று அரசியல்வாதிகளுக்கு மிகவும் முக்கியமான நாள். ஆளுநர் இன்று வாய் திறந்து யாரைவாது ஆட்சி அமைக்க சொல்லியே ஆகவேண்டும்.
ஒரு வேளை அப்படி ஆளுநர் வாய் திறந்தால் என்னெல்லாம் நடக்கும்..?
1)ஓ.பி.எஸ் கருத்தை நிராகரித்து,அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்கலாம்.அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறும் பட்சத்தில் ஆட்சியை கலைக்கலாம்.
2)சட்டமன்றத்தை கூட்டி ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரையும் வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கோரலாம்.
இந்த வாக்கெடுப்பை வெளிப்படையான வாக்கெடுப்பாகவோ அல்லது ரகசிய வாக்கெடுப்பாகவோ நடத்த ஆளுநர் உத்தரவிடலாம்.
ஒருவேளை எடப்பாடி ஆட்சி அமைப்பது உறுதியானால் பன்னீர் தனது ஆதரவு உறுப்பினர்களை கூட்டிக் கொண்டு போய் ஸ்டாலினிடம் ஒப்படைத்து விடுவார்.
அதற்கான பேச்சுவார்த்தையும் முடிந்து விட்டதாக கூறுகிறார்கள். திமுக உறுப்பினர்கள் சென்னை வருகிறார்கள்.
பார்க்கலாம் முதல்வர் ஸ்டாலினா, பன்னீரா, எடப்பாடியா என்று..?


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.