Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 24, 2017

ஹைட்ரோ கார்பன்’ போராட்டம் வலுவடைகிறது! ஐடி இளைஞா்களுடன் வக்கீல்கள் இணைந்தனா்!


புதுகை நீதிமன்ற வழக்கறிஞர்கள்  ‘ஹைட்ரோ கார்பன்’  இயற்கை வாயு எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றும் நாளையும் நீதிமன்ற புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் நாளைய தினம்  மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியரிடத்தில் மீத்தேன், இயற்கை வாயு எனும் பெயரில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் மக்களின் வாழ்வுரிமையைக் கேள்விக்குள்ளாக்கும். இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும் மக்கள் விரோதச் செயல்களுக்கு எதிரான கோரிக்கை மனுவினையும் வழங்க இருக்கின்றனர்.

மக்கள் போராட்டத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் முகமாக வழக்கறிஞர்களை இணைக்கும் பணியை வழக்கறிஞர்  போத்தியப்பன் குழுவினர் செய்து வருகின்றனர். தற்போது ஐடி இளைஞா்கள் உடன் பொதுக்கள், வக்கீல்கள் போராட்டத்தில் இணைந்துள்ளனா்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.