Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 9, 2017

பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக களமிறங்கும் இளைஞர்கட்சி! அதிரடி திருப்பம்!


தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று இரவு சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சுமார் 45 நிமிடங்கள் திடீரென மௌன அஞ்சலி செலுத்தினார்.
அதன் பிறகு மௌனத்தை கலைத்த பன்னீர்செல்வம், தற்போது தமிழகத்தில் நடந்து வரும் அரசியல் நிகழ்வுகள் பற்றி பேட்டி அளித்தார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் என்னவெல்லாம் செய்தார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை போட்டு உடைத்தார்.
இதனால் பன்னீர்செல்வத்தின் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அதிமுக மூத்த நிர்வாகி பி.எச்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜல்லிக்கட்டு தடை நீக்கி விரைவாக நடவடிக்கை எடுத்த நமது முதல்வர் பன்னீர்செல்வத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஒருங்கிணைந்து இளைஞர் கட்சி என்ற ஒரு அமைப்பு உருவாக்கி இருக்கிறார்கள்.
தற்போது இளைஞர் கட்சியில் நிர்வாகிகள் தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, இளைஞர் கட்சி ஆதரவு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் தமிழக அரசியல் வரலாற்றில் புதிய திருப்பங்களை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.