Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 11, 2017

சசிகலா மீது கடும் அதிருப்தி: முதல்வர் ஓபிஎஸ்-க்கு சவுண்டு பொன்னையன் திடீர் ஆதரவு?


சசிகலாவை விழுந்து விழுந்து ஆதரித்த பொன்னையன் தற்போது திடீரென முதல்வர் ஓபிஎஸ்ஸை ஆதரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சசிகலாவை மிக தீவிரமாக ஆதரித்து சவுண்டு விட்டு வந்த அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் தற்போது திடீரென முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எம்ஜிஆர் காலத்தில் அமைச்சராக இருந்தவர் பொன்னையன். ஜெயலலிதா அதிமுக செய்தித் தொடர்பாளராக பொன்னையனை நியமித்திருந்தார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது செய்தியாளர்களிடம் அதிகமாக பேசியவர் பொன்னையன். ஜெயலலிதா திடீரென மறைந்த போது ஊடகங்களால் கடுமையான விமர்சனத்துக்குள்ளானார் பொன்னையன்.

சர்ச்சை பொன்னையன்
பின்னர் சசிகலாவை படுதீவிரமாக ஆதரித்து குரல் கொடுத்தவர் பொன்னையன். அதுவும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலா என ஸ்ரீராம் சிட்பண்ட் நாமினி பேப்பரை காட்டியும் சர்ச்சையில் சிக்கியவர் பொன்னையன்.

அவைத் தலைவர்
இந்த நிலையில் அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதன் திடீரென முதல்வர் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தந்தார். இதனால் அதிமுக அவைத் தலைவர் பதவியில் இருந்து இடைக்கால பொதுச்செயலர் சசிகலாவால் மதுசூதனன் நீக்கப்பட்டார்.


அதிருப்தி
புதிய அவைத் தலைவராக கே.ஏ. செங்கோட்டையனை நியமித்திருந்தார் சசிகலா. அதிமுக அவைத் தலைவர் பதவி தமக்கு கிடைக்கும் என காத்திருந்த பொன்னையனுக்கு இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஓபிஎஸ்-க்கு ஆதரவு?
இதனால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தம்முடைய ஆதரவை தெரிவிக்க பொன்னையன் முடிவு செய்துள்ளாராம். எந்த நேரத்திலும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க பொன்னையன் செல்லக் கூடும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.