February 6, 2017
கடலை ஆக்கிரமித்த கச்சா எண்ணெய், மிதக்கும் கடல் உயிரினங்கள், எங்கே போனது பீட்டா?
கடற்பரப்பு முழுவதையும் ஆக்கிரமித்துள்ள கச்சா எண்ணெய் ஏராளமான கடற்வாழ் உயிரினங்கள் செத்து மிதப்பதற்கு வழிவகுத்துள்ளன. இதனை சுத்தம் செய்ய க்ளீன் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்திய பா.ஜ.க.வினரோ அல்லது ஜல்லிக்கட்டுக்கு மல்லுக்கட்டிய பீட்டா அமைப்போ இதுவரை முன்வரவில்லை. கடந்த 28ம் தேதி சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எண்ணெய்க் கப்பலில் இருந்த 40 டன் கச்சா எண்ணெய் கசிந்து கடற்பரப்பு முழுவதும் பரவியது. இதனால், சென்னை எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை பரவிய கடற்பரப்பில் கச்சா எண்ணெயால் கடல் மாசுபாடு ஏற்பட்டுள்ளது. எண்ணெய் படலத்தை அகற்ற எந்திரங்கள் கை கொடுக்காததால் கடலோர காவல் படையினரும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் தன்னார்வலர்களாக இளைஞர் கூட்டமும் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளது. பீட்டா கண்களுக்கு ஏன் தெரியவில்லை? கச்சா எண்ணெய் படலத்தில் சிக்கி திணறி ஏராளமான ஆமைகள், நண்டுகள் மற்றும் மீன்கள் கடலோரத்தில் செத்து கரை ஒதுங்கியுள்ளன. ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி மல்லுக்கட்டிய பீட்டா அமைப்புக்கு கடல்வாழ் உயிரினங்கள் மடிவது ஏன் தெரியவில்லை. ஜல்லிக்கட்டை தடை செய்ய முன்வந்த பீட்டா, இதற்கு ஏன் முன்வரவில்லை? ஜல்லிக்கட்டை தடை செய்ய மட்டும் புயல்வேகத்தில் செயல்பட்ட பீட்டா, கச்சா எண்ணெயில் சிக்கி சாகும் கடல் வாழ் உயிரினங்களை காப்பாற்ற என்ன முயற்சி எடுத்துள்ளது? மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தொற்று நோய் உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் கடற்பரப்பை சுத்தப்படுத்த யாரும் ஏன் முன்வரவில்லை என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.
கடலை ஆக்கிரமித்த கச்சா எண்ணெய், மிதக்கும் கடல் உயிரினங்கள், எங்கே போனது பீட்டா?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 06, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 06, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.