February 14, 2017
மழையின்றி வைகை அணையில் நீர் இருப்பு குறைவால் ஏற்பட்ட பாதிப்பு
ஆண்டிபட்டி;மழையின்றி வைகை அணையில் நீர் இருப்பு குறைவால் மீன் குஞ்சுகளை அதில் வளர்க்க விட முடியாத சூழல் நிலவுகிறது. மீன்வளத்துறை அலுவலகத்தில் இருப்பில் உள்ள 5 லட்சம் மீன் குஞ்சுகளை பராமரிக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் வைகை, மஞ்சளாறு,சோத்துப்பாறை அணைகளில் மீன்வளத்துறை மூலம் மீன்பிடி தொழில் நடந்துவருகிறது. அணைகளில் நீர் வளத்தை பெருக்கும் வகையில் ஆண்டுதோறும் பல லட்சம் மீன் குஞ்சுகள் நீர் தேக்கப்பகுதியில் விடப்படும்.
வைகை அணை மீன் வளத்துறை அலுவலகத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட தொட்டிகளில் வளர்க்கப்படும் நுண்மீன் குஞ்சுகள் விரலிகளாக வளர்ந்தபின், நீர் தேக்கத்தில் விடப்படும். சில வாரங்களில் இவை வளர்ந்த பின் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். வைகை அணையில் இந்த ஆண்டு 21 லட்சம் மீன் குஞ்சுகள் விட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரையில் 15 லட்சம் வரை அணையில் விடப்பட்டுள்ளன. தற்போதுள்ள சூழலில் மழையின்றி அணையில் நீர் இருப்பு 24 அடிக்கும் குறைவாக உள்ளது(மொத்த உயரம் 71 அடி). இதனால் தற்போது இருப்பில் உள்ள மீன் குஞ்சுளை வளர்ப்புக்கு விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீன்வளத்துறையினர் கூறியதாவது: மாவட்டம் முழுவதும் நிலவும் வறட்சியால் குளம், கண்மாய்களிலும் மீன்களை வளர்ப்புக்கு விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனியாரும் மீன் வளர்ப்பில் ஆர்வம் இல்லாததால் இருப்பில் உள்ள மீன் குஞ்சுகளை விற்பனை செய்யவும் முடியவில்லை. தினமும் மீன் குஞ்சுகளுக்கு உணவு கொடுத்து பராமரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,என்றனர்.
மழையின்றி வைகை அணையில் நீர் இருப்பு குறைவால் ஏற்பட்ட பாதிப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 14, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 14, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.