Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 12, 2017

சமூக விரோதிகள் ஊடுறுவலா… சென்னையில் போலீசார் விடிய விடிய சோதனை


சமூக விரோதிகள் சென்னையில் ஊடுறுவி உள்ளதாகக் கூறி போலீசார் சென்னையின் பல பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் பல்வேறு முக்கிய சாலைகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் விடிய விடிய சோதனைகள் நடைபெற்றன.

சமூக விரோத செயல்கள் சென்னையில் நடைபெற வாய்ப்பிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சென்னை போலீசார் உஷார் நிலைப்படுத்தப்பட்டனர். தீவிர கண்காணிப்பு சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளுக்கு இரவில் சென்ற போலீசார் அங்கு தங்கி இருப்பவர்களிடம் சோதனை நடத்தினார்கள். மேலும், சந்தேகத்திற்கு இடமானவர்களிடம் அடையாள அட்டை கேட்டு பரிசோதனை செய்தனர்.

தமிழகத்தில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக அரசு நிர்வாகம் ஸ்தம்பித்திருக்கிறது. இந்நிலையில், சமூக விரோதக் கும்பல் ஊடுறுவல் இருப்பதாகக் கூறி மேலும், மக்கள் மத்தியில் பீதியில் ஏற்படுத்தாமல் பொறுப்பாக காவல்துறை நடந்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.