Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 2, 2017

மாணவி தீ வைத்து எரிப்பு... மருத்துவக் கல்லூரியில் பயங்கரம்.. ஒரு தலைக்காதலா?


கேரள மருத்துவக் கல்லூரி வகுப்பறையில் மாணவியை முன்னாள் மாணவர் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் முன்னாள் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரள மருத்துவக்கல்லூரி வகுப்பறையில் சக மாணவ, மாணவிகள் முன்னிலையில் ஒரு மாணவி மீது முன்னாள் மாணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததோடு தானும் தீவைத்துக்கொண்டார். இதில் அந்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரள மாநிலம் கோட்டயத்தில் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆதர்ஷ். 20 வயதான இவர் நேற்று கல்லூரிக்கு வந்துள்ளார்.

அப்போது ஒரு வகுப்பறைக்குக்குள் நுழைந்த ஆதர்ஷ் அனைத்து மாணவ, மாணவிகள் முன்னிலையில் அங்கிருந்த லக்ஷ்மி என்ற மாணவி மீது பெட்ரோலை ஊற்றியுள்ளார். பின்னர் தானும் பெட்ரோலை ஊற்றிக்கொண்டுள்ளார்.
சூழ்நிலையை உணர்ந்த அந்தப் பெண் வகுப்பறையில் இருந்து தப்ப முயன்றுள்ளார். அவரை துரத்திச்சென்ற அந்த இளைஞர் தான் வைத்திருந்த லைட்டரைக் கொண்டு அந்தப் பெண்ணின் ஆடையை பற்ற வைத்துள்ளார்.

பின்னர் தன் மீதும் தீவைத்துக் கொண்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவ, மாணவிகள் தீயை அணைத்தனர். இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் சிகிச்சைப்பலனின்றி இளைஞர் உயிரிழந்தார். படுகாயமடைந்த லக்ஷ்மி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவர்களை காப்பாற்ற முயன்றபோது 2 மாணவர்களும் காயமடைந்தனர்.
வகுப்பறையில் நடந்த இந்த பயங்கர சம்பவம் மாணவ,

மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஒர தலைக் காதலால் இந்த சம்பவம் அரங்கேறியாதா அல்லது அந்தப் பெண் ஏமாற்றியதால் இளைஞர் இந்த முடிவை எடுத்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.