February 2, 2017
எங்களை கதி கலங்க வைத்த இந்திய வீரர் – பாகிஸ்தான் படைத்தளபதி பகீர் தகவல்
இந்திய – பாக். போரில், பாகிஸ்தான் விமானப்படைகளுடன் தனி ஆளாக போராடி பாக். வீரர்களை கதி கலங்க செய்த இந்திய வீரர் நிர்மல்ஜித் சிங் செகான்.
1965ஆம் ஆண்டு இந்திய – பாக் போரில் பாகிஸ்தானின் விமானப்படைகளை சாதூர்யமாக பயன்படுத்தி வெற்றியை பாகிஸ்தானுக்கு வழங்கியதில் முக்கியமானவர் பாக். விமானப் படை விங் கமாண்டர் சங்கசி.
1971 டிசம்பர் 24ம் தேதியன்று மீண்டும் பாக். கமாண்டர் சங்கசிக்கு ஒரு ரகசிய உத்தரவு கொடுக்கப்பட்டது. அந்த உத்தரவை பார்த்த சங்கசி இந்தியாவை பழிதீர்க்க மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தார்.
இந்தோ – பாக் போர் ஒப்பந்தங்கள் படி ஜம்மு விமானப் படை தளத்தில், இந்தியா அதிக போர் விமானங்களையோ, போர் தளவாடங்களையோ நிறுத்தாது. எனவே, ஜம்மு விமானப்படை தளத்தில் இருந்து இந்திய ராணுவத்துக்கான பொருட்களை முழுமையாக சப்ளை செய்ய முடியாது.
இந்திய ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், உணவு, மருந்துகள் என்று காஷ்மீர் எல்லைக்கு பொருட்களை விரைவாக கொண்டு வந்து கொண்டிருக்கும் ஒரே வழி இந்த அவந்திபூர் விமானப் படை தளம்தான்.
ஜம்முவில் இருந்து இந்திய ராணுவத்துக்கு தேவையான பொருட்களை நிலம் வழியாக கொண்டுவர வேண்டும் என்றால் பனிப் பொழிவு, பனிச் சரிவு, நிலச் சரிவுகளைத் தாண்டி சுமாராக 36 – 48 மணி நேரம் ஆகும். அதற்குள் நமது பாக். ராணுவம் காஷ்மீரை கைப்பற்றிவிடும்.
பாக். ராணுவத்தின் திட்டம் எதுவும் தெரியாமல், இங்கே, விமான கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து ரோந்து செல்வதற்கான அனுமதிக்காக கும்மனும், நிர்மல்ஜித் சிங் செகானும் காத்திருக்கிறார்கள்.
அதற்குள் பாக். விமானிகள் அவந்திபூர் விமானப்படை தளத்தை நோக்கி 30 நிமிட போர் பயணத்தை தொடங்குகிறார்கள். பாக்.கில் இருந்து இந்தியாவின் புஞ்ச் வரை சுமார் 500 – 1000 அடி உயரத்தில் லோ ஃப்ளையிங் செய்கிறார்கள்.
இப்படி லோ ஃப்ளையிங் செய்வதால் ஸ்ரீநகரின் விமானக் கண்காணிப்பு கோபுரத்தால் பாக் பயன்படுத்தும் விமானங்களை கண்டு பிடிக்க முடியாது என்று கணித்தே அவர்கள் புறப்படுகின்றனர்.
பாக். விமானப்படையின் தாக்குதலை எதிர்பார்க்காத நிர்மல்ஜித் சிங் செகானும், கும்மனும் நிலைகுலைந்தனர். ஆனாலும் தங்களிடம் இருந்த சிறிய ரக விமானத்தில் தாக்க முயற்சித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் கும்மனின் விமானம் இயந்திர கோளாறால் அதை இயக்க முடியவில்லை. அதற்குள் நிர்மல்ஜித் சிங் செகான் தன் விமானத்தை இயக்கி பாக். விமானப்படைகளுக்கு எதிராக போராட ஆரம்பித்திருக்கிறார்.
பாக். விமானப்படையில் 6 விமானங்களில் இரண்டை தாக்கி அழித்துவிட்டார் நிர்மல்ஜித் சிங் செகான். இந்நிலையில் சொகனின் விமானத்தில் குண்டுகள் தீர்ந்து விட்டன. இதை கணித்த பாக். படையில் தளபதி தனது சூழ்ச்சியால் செகான் விமானத்தை தகர்க்க ஆரம்பித்திருக்கிறார்.
இந்திய படைகள் வரும் வரை தனி ஆளாக பாக். விமானங்களுக்கு தண்ணி காட்டிய அந்த மகத்தான வீரர் ஆயுதங்கள் இல்லாமல் நிராதயுதபாணியாக போராடியிருக்கிறார். அதற்குள் இந்திய படைகள் வந்து விட்டன.
பாக். படைகள் அதற்குள் செகான் விமானத்தை தாக்கி விட்டு தப்பிவிட்டன. காஷ்மீரின் மலைகளுக்கு இடையே விழுந்த விமானத்துடன் செகான் பலியானார். இந்திய ராணுவம் 6 மாதங்கள் தேடியும் அவர் உடல் கிடைக்கவில்லை. செகான் கடைசியாக பேசிய வார்த்தைகள் ‘‘கும்மா நா தாக்கப்பட்டேன்னு நினைக்கிறேன்’’ அப்படின்னு கூறியிருக்கிறார்.
இந்திய அரசால் நிர்மல்ஜித் சிங் செகானுக்கு ‘‘பரம் வீர் சக்ரா’’ விருது வழங்கப்பட்டது. இந்திய விமானப்படையில் இந்த விருது பெற்ற ஒரே வீரர் நிர்மல்ஜித் சிங் செகான் மட்டுமே.
பலம் நகரில் உள்ள விமானப் படை அருங்காட்சியகத்தில் ஒரு சிலை வைத்து, அவர் விரும்பி ஓட்டிய நாட் விமானத்தையும் அவருக்கு அருகில் நிறுத்தி பெருமையடைந்திருக்கிறார்கள். அவரின் பெயரை ஒரு மெரைன் டாங்கருக்கு வைத்திருக்கிறது இந்திய ராணுவம்.
இந்நிலையில் பாக். தளபதி வெளியிட்ட தகவலில், இந்தோ-பாக் போரில் சிறிய ரக விமானத்தால் எங்களை கதி கலங்க செய்த வீரர் என்றும் மேலும் நிர்மல்ஜித் சிங் செகான் எங்களுக்கு எமனாகவே தெரிந்தார் என்றும் அவரைப் போன்ற தைரியமான ஒரு வீரரை பார்ப்பதே அரிது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியாவிற்கு, இவரைப் போன்ற வீரப் புதல்வர்கள் பலபேர்! இவர்களால்தான், ‘நாட்டைக் காக்க நானும் வருவேன்’ என இளைஞர்கள் நெஞ்சம் நிமிர்த்தி, ராணுவத்தில் சேரத்துடிக்கின்றனர்.
நிர்மல்ஜித் சிங் செகான்… ஒரு நிஜமான ஹீரோ!
எங்களை கதி கலங்க வைத்த இந்திய வீரர் – பாகிஸ்தான் படைத்தளபதி பகீர் தகவல்
Reviewed by மறத்தமிழன்
on
February 02, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 02, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.