Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 24, 2017

மகா சிவராத்திரி: குஜராத்தில் குவிந்த 'அம்மண சாமியார்கள்'! நள்ளிரவில் அதிரவைக்கும் நிர்வாண அணிவகுப்பு




Hundreds of Naked Sadhus have started arriving at the Junagadh, Girnar Bhavnath temple premises ahead of Mahashivaratri.
ஜூனாகத்: மகா சிவராத்திரியை முன்னிட்டு குஜராத்தின் ஜூனாகத் பாவ்நாத் சிவன் கோவில் கிணற்றில் புனித நீராட அம்மண சாமியார்களாகிய 'நாகா' பாபாக்கள் குவிந்து வருகின்றனர். இன்றைய மகாசிவராத்திரி நள்ளிரவில் நிர்வாணமாக யானைகள் மீது அமர்ந்தும் பல்வேறு சாகசங்களை வெளிப்படுத்தியும் சாமியார்கள் ஊர்வலம் நடத்த உள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் ஜூனாகாத் நகரின் கிர்னார் மலையடிவாரத்தில் பாவ்நாத் கோவில் உள்ளது. இந்த கோவிலைச் சுற்றி இந்து சாமியார்களின் 'அகாடாக்கள்' எனப்படும் மடங்கள் ஏராளமாக உள்ளன.
இவற்றில் நிர்வாண சாமியார்களின் மடங்களும் அடங்கும்.

கிர்னார் மலையின் உச்சியில் உள்ள நேமிநாத் ஜைன ஆலயத்துக்கு 10,000 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும். ஆண்டுதோறும் மகாசிவராத்திரியை முன்னிட்டு நாகா பாபாக்கள் எனப்படும் நிர்வாண சாமியார்கள் பாவ்நாத் கோவிலில் உள்ள புனித கிணற்றில் நீராடுவது வழக்கம்.
விடியவிடிய ஊர்வலம்
இதற்காக கிர்னார் மலை அடிவாரத்தில் இருந்து பாவ்நாத் கோவில் வரை நள்ளிரவில் நிர்வாண சாமியார்கள் ஊர்வலம் நடத்துவர். நிர்வாணமாகவே யானைகள் மீது அமர்ந்தும் விதம் விதமாக சாகசங்களை செய்து காட்டியும் விடிய விடிய இந்த ஊர்வலம் நடைபெறும்.
நீராடல்
ஏராளமான பொதுமக்களும் இந்த ஊர்வலத்தை பார்க்க சாரை சாரையாக திரண்டு வருவர். அதிகாலையில் பாவ்நாத் சிவன் கோவிலில் உள்ள புனித கிணற்றில் நீராடி பின்னர் வழிபாடு நடத்துவர்.
குவிந்த நிர்வாண சாமியார்கள்
இந்த ஆண்டும் மகாசிவராத்திரியை முன்னிட்டு பாவ்நாத் சிவன் கோவிலில் ஏராளமான நிர்வாண சாமியார்கள் எனப்படும் நாகா பாபாக்கள் குவிந்துள்ளனர். இன்று நள்ளிரவு நிர்வாண சாமியார்களின் ஊர்வலம் நடைபெற உள்ளது.
நாகா பாபாக்கள்
இந்த நாகா பாபாக்கள் எனப்படும் நிர்வாண சாமியார்களிடம் ஆசிபெறுவதை வட இந்தியர்கள் பெரும் புண்ணியமாக கருதுவர். நேபாளம் பசுபதிநாதர் கோயிலும் சிவராத்திரியை முன்னிட்டு நிர்வாண சாமியார்கள் குவிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
2013-ம் ஆண்டு கிர்னார் பாவ்நாத் கோவிலில் நடைபெற்ற நிர்வாண சாமியார்கள் ஊர்வல வீடியோ காட்சி:


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.