Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 13, 2017

கனிமொழி வீட்டில் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய மா்ம நபா்..!


திமுக தலைவா் கருணாநிதியின் மனைவி ராசாத்தியம்மாள், இவா்களது வீடு சிஐடி காலனியில் உள்ளது.

கனிமொழி இவரின் மகன் ஆதித்யா ஆகியோர் உடன் ராசாத்தியும் வசித்து வருகிறார். இது முன்னாள் முதல்வரின் வீடு என்பதால் வீட்டில் எப்போதும் 2 போலீசார் காவலுக்கு நிற்பது வழக்கம்.

.இந்நிலையில் இன்று மதியம் கனிமொழி  திமுகவின் உயர் மட்ட கூட்டத்திற்கு புறப்பட்டார்.

அப்போது சிறிது நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம ஆசாமி ஒருவன் மேல் மாடிக்கு சென்று மாடியில் தங்கியிருந்த இரண்டு பணிப்பெண்களையும் துப்பாக்கி முனையில் மிரட்டி பதுக்கி வைத்திருந்துள்ளான்.

கனிமொழி சென்ற சிறிது நேரம் கழித்து இரண்டு பணிப்பெண்களையும் காணவில்லையே என்று மாடிக்கு தேடி சென்றுள்ளார் ராஜாத்தி அம்மாள்.

அந்த வீடு மாடியில் பல அறைகள் மற்றும் கிராமத்தில் இருப்பது போல் தாழ்வாரம் கொண்ட வீடு.

பணிப்பெண்களை தேடி ராஜாத்தி அம்மாள் சென்றவுடன் அவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டிய ஆசாமி நகை பணத்தை கொண்டு வந்து தரும்படி கேட்டுள்ளான்.

இதனால நிலை குலைந்து போன ராஜாத்தி அம்மாள் அவனிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் மசியாத அவன் பணம் நகைகளை தராவிட்டால் இரண்டு பணிப்பெண்களையும்சுட்டுகொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளான்.

பணம் நகைகள் கீழே பீரோவில் உள்ளது என்று ராஜாத்தி அம்மாள் கூறியுள்ளார். போய் எடுத்து வா, எதாவது செய்தால் இவர்களை கொன்று விடுவேன் என்று கீழே அனுப்பியுள்ளான்.

கீழே பதைபதைப்புடன் ஓடி வந்த ராஜாத்தி அம்மாள் பேரன் ஆதித்தியாவிடம் சொல்லி கனிமொழிக்கு தகவல் சொல்ல சொல்லிவிட்டு நைசாக வாசலில் நின்ற போலீசாரிடம் விபரத்தை கூற போலீசார் அதிரடியாக மேலே நுழைந்து துப்பாக்கி முனையில் அந்த ஆசாமியை பிடித்துள்ளனர்.

அவனை பிடித்து அபிராமபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவன் பெயர் பிரசாந்த் என்பதும், திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவன் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கனிமொழி ராஜ்ய சபா எம்பி எனபதால் வந்தவன் திருடும் நோக்கத்துடன் வந்தவனா வேறு நோக்கத்துடன் வந்தானா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.