February 21, 2017
‘‘இது சினிமா இல்லை, எங்க வாழ்க்கை’’ விஜயசாந்தியை வெளுத்து வாங்கிய பிரபல இயக்குநர்!
தமிழகத்தில் சசிகலாவின் பினாமி முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகை விஜயசாந்தி வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு பல தரப்புகளிலும் இருந்து கண்டனம் எழுந்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவரது சமாதிக்கு வந்திருந்த விஜயசாந்தி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”அதிமுக பிளவுபடாமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். கட்சியை உடைக்க சதி நடக்கும்” என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது சசிகலாவின் பினாமி முதல்வராக பதவியேற்று இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விஜயசாந்தி வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இதற்கு தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்து இருக்கும் பிரபல இயக்குநரும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன், ”விஜயசாந்திக்கு பெரிய அரசியல் வித்தகர் என்ற நினைப்பா! கருத்துகளை உங்கள் மாநிலத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இது சினிமா அல்ல! எங்கள் வாழ்க்கை!” என்று காட்டமாக பதில் அளித்துள்ளார்.
‘‘இது சினிமா இல்லை, எங்க வாழ்க்கை’’ விஜயசாந்தியை வெளுத்து வாங்கிய பிரபல இயக்குநர்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 21, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 21, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.