மக்கள் என்னைக்கு ஆடம்பரத்திற்கும், சுகபோக வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு அந்நிய கலாச்சாரத்திற்கு அடிமையானார்களோ அன்றே தமிழ் கலாச்சாரமும், பண்பாடும் அழிய தொடங்கிவிட்டது.
நம் முன்னோர்கள் எல்லாம் நமக்கு அடுத்து வரும் தலைமுறை சந்ததிகள் நன்மையை கருத்தில் கொண்டு ஒவ்வொரு செயல்களையும் செய்தார்கள். ஆனால், அவர்கள் சொல்லி சென்ற விஷயங்களெல்லாம் இன்றைய தலைமுறைகள் புறக்கணித்தன. இதுதான் உண்மை.
ஒரு கால கட்டத்தில் வியாபாரத்திலும், விற்பனையிலும் கொடிகட்டி பறந்த நிறுவனங்கள் எல்லாம் இன்று அதன் சுவடே தெரியாமல் போய்விட்டது.
கடந்த 25 வருடங்களுக்கு முன்பு கிராமங்களில் வீட்டிற்கு யாராவது விருந்தினர் வந்தால், பெட்டிக்கடையில் போய் கோலி சோடாவோ அல்லது காளிமார்க் கலரையோ வாங்கி கொடுத்து உபசரிப்பார்கள்.
மேலும் கிராமங்களில் சோடாவிற்கு பெயர் போனது கோலிசோடா. இளைஞர்களே நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஒருவேளை உங்களுக்கு தெரியாவிட்டால் வீட்டில் அப்பாவிடமோ, தாத்தாவிடமோ கேட்டுப் பாருங்கள் கதை கதையாய் சொல்வார்கள்.
அப்படி பெயர் பெற்ற கோலிசோடா, என்னைக்கு அந்நிய குளிர்பானங்கள் வரத் தொடங்கியதோ அன்றிருலிந்து சரிவை நோக்கி சென்று அதளபாதளத்தில் தள்ளப்பட்டது.
தற்போது ஜல்லிக்கட்டு புரட்சியால் வெளிநாட்டு குளிர்பானங்களை மாணவர்கள் புறக்கணித்ததால் மீண்டும் புத்துயிர் பெற்று தனது பழைய புகழை அடைய வருகிறது கோலிசோடா.
மாணவர்களே! நீங்கள் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் மீது கொண்ட பற்று ஜல்லிக்கட்டு புரட்சியில் வெளிப்பட்டிருக்கிறது. இளைய சமுதாயமே நீ செய்த ஒரு புரட்சி எத்தனையோ நல்ல காரியங்களை செய்திருக்கிறது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.