Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 14, 2017

கூவத்தூர் பிற்கால வரலாற்றில் பேசப்படும் என்றும் சசிகலா தெரிவிப்பு


சென்னை: எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைக்கவில்லை என்பதை நிரூபிக்க இங்கேயே நானும் தங்குகிறேன் என்று கூவத்தூர் விடுதியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்தார். கூவத்தூர் பிற்கால வரலாற்றில் பேசப்படும் என்றும் சசிகலா தெரிவித்தார். எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்துள்ளதாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்று கூறிய சசிகலா, மக்களை காப்பது அரசின் கடமை என்றும், ஆனால் இங்கு எம்.எல்.ஏ.க்களை மிரட்டி வருகின்றனர் என்று சசிகலா குற்றம் சாட்டினார்.
மக்களுக்கு ஒரு பிரச்சினை உடனே சென்று தீர்த்து வைக்க வேண்டும் என்றும், எம்.ஜி.ஆர் மறைவுக்கு அதிமுகவை ஒன்றினைத்தவர் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார். மேலும் ஒவ்வொரு மக்களின் மனதிலும் இடம் பிடித்தவர் ஜெயலலிதா என்றும், ஜெயலலிதா நினைவிடம் அதிசயிக்கும் வகையில் கட்டப்படும் என்றும் சசிகலா தெரிவித்தார்.
உயிருள்ளவரை அனைவரும் ஒற்றுமையாக இருந்து அதிமுகவை காப்பாற்றுவோம் என்று தெரிவித்த சசிகலா, மீதமுள்ள நான்கரை ஆண்டு கால ஆட்சியை அதிமுக சிறப்பாக நடத்தும் என்றும் சசிகலா தெரிவித்தார். மக்களின் பசியை தீர்த்த தலைவர்களின் வழியில் நாம் வந்துள்ளோம் என்றும் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பேசிய சசிகலா இவ்வாறு தெரிவித்தார். கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சுதந்திரமாக உள்ளனர் என்றும், அனைவரும் சந்தோஷமாகவும், ஒற்றுமையுடனும், குடும்பமாக இருக்கின்றனர் என்று சசிகலா தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.