Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 20, 2017

அம்மா மரணத்தில் அப்போலோ வாயை கொடுத்து மாட்டி கொண்டதை கண்டுபிடித்து விட்டார்கள் !! வீடியோ இணைப்பு!!!


"மறைந்த முதலமைச்சர் அறிஞர் அண்ணா உணவுக்குழல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதனை சரி செய்வதற்காக அவர் வெளிநாடு சென்றார். அவருக்கு கதிர்வீச்சு மற்றும் புற்றுமருந்து சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. எனினும் அவரது நோய் குணமாகவில்லை. நாடு திரும்பிய அவருக்கு மீண்டும் பல மருத்துவ சிக்கல்கள் ஏற்பட்டன. அவற்றை அகற்றுவதற்காக மீண்டும் கதிர்வீச்சு சிகிச்சையையே அவர் மேற்கொள்ள வேண்டும் என்று வெளிநாட்டு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அவரது சிகிச்சையை மேற்பார்வையிட மாநிலம் தழுவிய மருத்துவர் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. அதில் பங்கேற்ற எங்கள் ஆசிரியர் மருத்துவர் ஆர்.சுப்பிரமணியம், 'மறு கதிர்வீச்சு சிகிச்சை வேண்டாம்' என்று எச்சரித்தார். ' ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்ட கதிர்வீச்சின் உச்சபட்ச அளவினை அண்ணா பெற்றிருக்கின்றபடியால், அதனை மீண்டும் கொடுக்கக் கூடாது. மீறிக் கொடுத்தால் கடுமையான பின்விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும்” என்பதே அவரது எச்சரிக்கையின் சாரம்.

ஆனாலும், வெளிநாட்டு மருத்துவர்களின் பரிந்துரையே நடைமுறைப்படுத்தப்பட்டது. எங்கள் ஆசிரியரின் எச்சரிக்கை உண்மையாகியது. கதிர்வீச்சால் உருவான பெர்கார்டிடிஸ்(Pericarditis) நோயால் அண்ணா தாக்கப்பட்டார். 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதியன்று அவரது உயிர் பிரிந்தது. 'இந்தச் செய்தியைத் தமிழ்நாட்டு மக்கள் அறிய மாட்டார்கள். ஏனெனில் அதனைப் பொதுவெளியில் வைத்து விவாதிக்க எவரும் முயற்சி மேற்கொள்ளவில்லை. இதனை நீங்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது. செய்த தவறுகளையே திரும்பத் திரும்பச் செய்து வாழ்வை வீணடிக்கக் கூடாது என்பதை நீங்கள் நினைவுகொள்ள வேண்டும்' என்ற அறிவுரையை எங்களுக்கு வழங்கிச் சென்றார், மக்கள் மீதும் மருத்துவத்தின் மீதும் காதல் கொண்ட எங்கள் ஆசிரியர் சுப்பிரமணியம். அவரது கூற்றுப்படியே ஜெயலலிதாவின் மரணம் குறித்து தீவிர தேடுதலில் இறங்கினோம். அவரது மரணம் நேர்மையாக அமையவில்லை என்பதை ஆய்வின் முடிவில் கண்டறிந்தோம்" - கவலை தோய்ந்த முகத்துடன் நம்மிடம் பேசினார் கோவையைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ். இவரும் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தியும், ' தமிழக முதல்வரும் கேள்விக்குள்ளாக்கப்பட்ட அவரது உடல்நிலையும்' என்ற தலைப்பில் ஆய்வை நடத்தி முடித்துள்ளனர்.

Thanks to விகடன்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.