Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 2, 2017

சென்னை கலவரத்துக்கு ஸ்டாலின் தூண்டுதலே காரணம்: எச். ராஜா ஷர்மா குற்றச்சாட்டு


சென்னையில் நடந்த கலவரத்துக்கு மு.க.ஸ்டாலினின் தூண்டுதலே காரணம் என எச்.ராஜா  ஷர்மா கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த கலவரத்திற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தான் காரணம் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாஷர்மா குற்றம்சாட்டியுள்ளார்
.
இது குறித்து அவர் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 1962-ல் தனி திராவிடம் கேட்டு போராட்டம் நடைபெற்றது. அதற்கு திராவிட கட்சிகள் துணை நின்றன. அதேபோல் தற்போது தனி அமைப்புகளையும், மாணவ அமைப்புகளையும் சீமான் தூண்டிவிட்டு தனி தமிழ்நாடு கோரிக்கையை முன் வைக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. பிரிவினைவாதம் பேசும் சீமானை தேசவிரோத வழக்கில் கைது செய்யவேண்டும்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது கெயில்குழாய் திட்டத்துக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கியது தி.மு.க. தான். இந்த திட்டத்தை மோடி அரசு தடை செய்தது. கடந்த காலங்களில் திராவிட கட்சிகள் தான் தமிழக மக்களுக்கு துரோகம் விளைவித்தது. ஆனால் தற்போது மோடி அரசு மீது பழி போடுகிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் முடிவில் சென்னையில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதற்கு மு.க.ஸ்டாலின் தான் காரணம் என எச்.ராஜா  ஷர்மா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.