February 11, 2017
அதிமுக எம்.எல்.ஏக்களுடன் சசிகலாவை சிறைபிடிக்கப் போவதாக கூவத்தூர் பொதுமக்கள் எச்சரிக்கை
அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலாவை சிறைபிடிப்போம் என கூவத்தூர் பொதுமக்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சி இடைக்கால பொதுச்செயலர் சசிகலாவை சிறைபிடிக்கப் போவதாக கூவத்தூர் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏக்களை மகாபலிபுரம் அருகே கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் சிறை வைத்துள்ளார் சசிகலா. அங்கிருந்து எம்.எல்.ஏக்கள் தப்பி ஓட முயற்சித்தனர்.
இதனால் அதிர்ந்து போன சசிகலா நேரடியாக கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ரிசார்ட்டுக்கு சசிகலா சென்றுள்ள நிலையில் கூவத்தூர் கிராம மக்களை அந்த ஊருக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.
இது அப்பகுதி மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. சசிகலா மற்றும் போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூவத்தூர் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் சசிகலாவும் எம்.எல்.ஏக்களுடம் உடனே கூவத்தூரை விட்டு வெளியேறாவிட்டால் முற்றுகைப் போராட்டத்தை நடத்தப் போவதாக பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன் சசிகலா உள்ளிட்டோரை சிறைபிடித்து முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்- அவரால் கூவத்தூரை விட்டு வெளியேற முடியாத நிலையை உருவாக்குவோம்; சாலையிலேயே படுத்து போராடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏக்களுடன் சசிகலாவை சிறைபிடிக்கப் போவதாக கூவத்தூர் பொதுமக்கள் எச்சரிக்கை
Reviewed by மறத்தமிழன்
on
February 11, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.