Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 7, 2017

மோடி தொகுதியில் ஸ்கர்ட் இன்றி மாணவிகளை ஓட விட்ட தலைமையாசிரியை! தலைசுத்தி கீழே விழுந்த கல்வி அதிகாரி?


பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில், அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகள் சமஸ்கிருதம் ஒப்புவிக்காததால், அவர்களை ஸ்கர்ட்(குட்டை பாவாடை) இன்றி ஓட வைத்து தலைமை ஆசிரியை தண்டனை கொடுத்துள்ளார்.

இது குறித்து அறிந்த மாணவிகளின் பெற்றோர் போராட்டம் நடத்தியதையடுத்து, அந்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியான சோன்பத்ரா மாவட்டம், அன்பரா நகரில் மாணவிகளுக்கான உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 15 மாணவிகள் கடந்த வெள்ளக்கிழமை அன்று, சமஸ்கிருதம் ஒப்புவிக்காமல் வகுப்புக்கு வந்தனர்.

இதையடுத்து, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மீனா சிங் அந்த மாணவிகளின் ஸ்கர்ட்டை கழற்றிவிட்டு பள்ளி மைதானத்தை சுற்றி ஓடச் செய்து, தண்டனை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்த தண்டனை குறித்து மிகவும் வெட்கப்பட்டு, வேதனைப்பட்ட மாணவிகள் 15 பேர் தங்கள் பெற்றோர்களிடம் புகார் அளித்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த, மாணவிகளின் பெற்றோர்கள், நேற்றுமுன்தினம் பள்ளிக்கு வந்து, தலைமை ஆசிரியை அளித்த தண்டனை குறித்து சண்டையிட்டு, வாதிட்டனர். உடனடியாக இந்த விவகாரம், மண்டல கல்வி அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆனால், இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்த தலைமை ஆசிரியை மீனா சிங்கை, இடைநீக்கம் செய்து மண்டல கல்வி அதிகாரி உத்தரவிட்டார். இது குறித்து மண்டல கல்வி அதிகாரி திலீப் குமார் கூறுகையில், “மாணவிகளுக்கு கொடூரமாக தண்டனை அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், பள்ளியின் தலைமை ஆசிரியை மீனா சிங் பள்ளி நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது, ஒருவாரத்தில் அறிக்கை என்னிடம் அளிக்கப்படும்” என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.