Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 28, 2017

நான் சுய இன்பத்திற்கு அடிமையாகிவிட்டேன் – என்ன செய்வது? ஒரு இளைஞனின் தவிப்பு


கேள்வி – நான் 24 வயது இளைஞர். என்னுடைய குடும்ப சூழல் ஒரு நடுநிலையான நிலையில் சென்று கொண்டிருக்கின்றது. தற்பொழுது, என்னுடைய வாழ்க்கை ஒரு தவறான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. நான் சுய இன்பத்திற்கு அடிமையாகிவிட்டேன்.
இதனால், அதிகமான ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை டவுண்லோடு செய்து வைத்திருக்கின்றேன். இதில், பாலிவுட் படங்கள் மற்றும் ஆபாச இணையதளங்களில் வரும் வீடியோக்கள் உள்ளடங்கும். அதே மாதிரி, இந்தியாவில் உள்ள ஆபாச நடிகைகளின் வீடியோக்களும் இருக்கின்றது.
இதனால், ஒரே அந்த வீடியோக்களை பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றுகின்றது. சுய இன்பம் பழக்கமும் அதிகரித்துவிட்டது. வேறு எந்த விஷயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. ஒரு நாளைக்கு குறைந்தது 6 முறை சுய இன்பம் பழக்கத்தில் ஈடுபடுகின்றேன். இந்த தீய பழக்கத்தில் இருந்து என்னால் விடுபட முடியவில்லை. இதிலிருந்து நான் வெளிவருவதற்கு நீங்கள் தான் ஆலோசனைகள் வழங்க வேண்டும்?
உளவியலாளரின் பதில் – மில்லியன் கணக்காண மக்கள் சுய இன்பம் பற்றியும், ஆபாச இணையதளங்கள் பார்ப்பது பற்றியும் தவறான கருத்துக்களே கொண்டுள்ளனர். ஒரு ஆணோ அல்லது பெண்ணோ பருவ வதைய அடைந்தவுடன், செக்ஸ் ரீதியான விஷயங்களை பற்றிய அறிவை தேடுவது இயல்பான ஒன்று தான்.
ஒரு மனிதனின் உடலில் உள்ள தீங்குகளை அகற்றி, உடல் ஆரோக்கியத்தை தருவதே உடலுறவு முறை. ஆனால், அதை தவறாக பயன்படுத்தும் பொழுதே, அதற்கு அடிமையாகும் சூழல் ஏற்படுகின்றது. ஆனால், உங்களுக்கு வந்திருக்கக்கூடிய பிரச்சனை என்னவென்றால், நீங்கள் ஆபாச வீடியோக்களை டவுண்லோடு செய்து பார்த்து, அதற்கு முற்றிலும் அடிமையாகி உள்ளீர்கள்.
இது தவறான விஷயம் தான். இதை, நீங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். எப்பொழுது, ஒரு ஆணும் பெண்ணும் செக்ஸ் வாழ்க்கையை மேற்கொள்ளும் பொழுதே, அது ஆரோக்கியமாகும். நீங்கள் தனியாக வீடியோக்கள் பார்ப்பதால், உங்களுக்கு மன அழுத்த பாதிப்பு அதிகமாக ஏற்படும்.
இதனால், நீங்கள் திருமணம் முடித்து, உங்கள் மனைவியுடன் முழுமையான முறையில் இல்லறத்தில் ஈடுபட முடியாது. அதனால், நீங்கள் உளவியலாளரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறும் அவசியமான ஒன்றாகும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.