Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 3, 2017

அரசியல் கட்சிகளே தோற்றது போங்கள்.. அமிர்தானந்தமாயி கூட்டத்திற்கு கூட்டம் சேர்க்க புதிய டெக்னிக்..


மாதா அமிர்தானந்தமாயி திண்டுக்கல் கூட்டத்துக்கு ஊர் ஊராக சென்று ஆட்களை திரட்டுவதை பார்த்து அரசியல் கட்சிகளே ஆச்சரியப்பட்டு போய் நிற்கின்றன. திண்டுக்கல்லுக்கு மாதா அமிர்தானந்தமாயி இன்று வருகை தருகிறார். திண்டுக்கல் அங்குவிலாஸ் மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தின் சுற்றுப்புற கிராமங்களுக்கு பேருந்துகளை அனுப்பி ஆட்களைத் திரட்டி வரும் பணியில் அமிர்தானந்தமாயி சீடர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரு கிராமத்துக்கு 2 பேருந்துகள் என அனுப்பி வைத்து காலை முதலே ஆட்களை திரட்டும் பணியில் தீவிரமாக இருந்து வருகின்றனர். பேருந்து வசதி மட்டுமின்றி இரவு சாப்பாடும் போடுகிறோம் வாருங்கள் என கூவி கூவி அழைக்கின்றனர்.

பாஜக ஆதரவாளர்களே அமிர்தானந்தமாயி கூட்டத்துக்கான ஆட்சேர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகள் பணம், சாப்பாடு கொடுத்து கூட்டங்களுக்கு ஆட்சேர்க்கின்றனர். இந்த அரசியல் கட்சிகளை மிஞ்சும் வகையில் அமிர்தானந்தமாயி கோஷ்டியினர் பேருந்துகளை அனுப்பி சாப்பாடு போடுவதாக கூறி ஆட்சேர்த்து வருவது ஆச்சரியப்பட வைத்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.