Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 22, 2017

திருமணமாகும் முன்பே கர்ப்பமடையும் பெண்கள்! பாதிக்கும் இளையதலைமுறை


திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் இளம் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் காதல் வயப்படுவதன் மூலம், திருமணத்திற்கு முன்பே உடலால் இணைந்து விடுகின்றனர்.

இதனுடைய விளைவு திருமணத்திற்கு முன்பு கர்ப்பமடையக்கூடிய சூழல்கள் ஏற்படுகின்றது. ஆனால், அதனுடைய விளைவுகள் என்ன என்பதை, அதன்பிறகே உணர்கின்றனர். அதன்பிறகு, தான் தவறு செய்துவிட்டோமே என்று கவலைப்படுகின்றார்கள்.

பெண்களின் இளமைப்பருவம் கண்ணாடி போன்றது. சிறிய தவறு நேர்ந்தாலும் எதிர்காலத்தின் நிலை மிகவும் கஷ்டமாகிவிடும். இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களைப் போன்றே பெண்கள் வாழக்கூடிய சூழல்கள் ஏற்படுகின்றது. அந்த ‘சமம்‘ அவர்கள் அறிவை விசாலப்படுத்த வேண்டும்.

அதன் மூலம் தனக்கும் – தன் ஆண் நண்பனுக்கும் இடையே எவ்வளவு இடைவெளி தேவை என்பதை அவள் உணர வேண்டும். அந்த இடைவெளியை உருவாக்க தெரிந்த பெண்கள் மட்டுமே பிரச்சினைகளின்றி வாழ்கிறார்கள்.

பெண்கள் சாதனைகளை நோக்கி வளர்ந்துக் கொண்டிருக்கும் நேரத்தில், திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் போன்ற செயல்கள் அவர்களை மீண்டும் இருட்டில் கொண்டுபோய் தள்ளிவிடும். ‘திருமணத்திற்கு பின்புதான் உடலுறவு’ என்ற பாரம்பரியத்தை முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். அது பெண்மைக்கு மதிப்பும், மரியாதையும் பெற்றுத்தரும்.

ஆனால், இதை மீறி பெற்றோர்களுக்கு தெரியாமல் காதல் என்ற பெயரில் ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் பொழுது விபரீத சூழல்களை ஏற்படுத்துகின்றது. இதை பெண் சமூகம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம், எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுகின்றது என்பதை உணர்ந்து, முறையான திருமண வாழ்வை மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.