February 20, 2017
ஜெ. மரணத்திற்கு சசிகலா குடும்பமே காரணம் என மக்கள் நினைக்கின்றனர் - ஸ்டாலின்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா மற்றும் அவரது குடும்பமே காரணம் என மக்கள் நினைக்கின்றனர் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின்,கடந்த 9 மாத காலமாக தமிழகம் எந்த நிலையில் உள்ளது என்று மக்களுக்கு தெரியும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், அண்ணா மருத்துவமனையில் இருந்த போது அரசு சார்பில் சிகிச்சை குறித்து அறிக்கை தரப்பட்டது என்றும், ஜெயலலிதா மறைவு என்ற தகவல் கூட குழப்பமான நிலையில் வெளியிடப்பட்டது என்று ஸ்டாலின் தெரிவித்தார். ஜெயலலிதா மறைந்த செய்தி வெளியாகும் முன்பே அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும், மரணத்திலும் மர்மம் உள்ளது. ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா மற்றும் அவரது குடும்பமே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெ. மரணத்திற்கு சசிகலா குடும்பமே காரணம் என மக்கள் நினைக்கின்றனர் - ஸ்டாலின்
Reviewed by மறத்தமிழன்
on
February 20, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.