February 1, 2017
சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மனோகர் பாரிக்கருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
கோவாவில் தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கோவாவில் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அங்கு பாஜவும், ஆம் ஆத்மியும் கடுமையாக மோதி வருகின்றன. இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் பிரசாரம் செய்த போது, ''காங்கிரஸ், பாஜ ஆகிய கட்சியினர் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். அது உங்கள் பணம். விலைவாசி உயர்ந்து விட்டதால் ஓட்டுக்கு 10 ஆயிரம் கேளுங்கள். ஆனால், ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடுங்கள்'' என்று பேசினார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் மத்திய மந்திரி மனோகர் பரிக்கர் சிம்பெல் என்ற இடத்தில் பாஜ கூட்டத்தில் பேசும் போது,
''அரசியல் கட்சிகள் நடத்தும் ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக அளிக்கப்படும் பணத்தை பெற்றுக் கொள்வதில் எந்த தவறு இல்லை. ஓட்டு போட அவர்கள் பணம் கொடுத்தால் அதையும் தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், தாமரைக்கு மட்டும் வாக்களியுங்கள்'' என்று பேசினார்.
இது தொடர்பாக மத்திய பாதுகாப்புதுறை மந்திரி மனோகர் பாரிக்கருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மேலும் பிப்ரவரி 3-தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவில் கூறப்பட்டுள்ளது
சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மனோகர் பாரிக்கருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
Reviewed by மறத்தமிழன்
on
February 01, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 01, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.