Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 1, 2017

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து துரைமுருகன் விடுதலை


திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோர் மீது கடந்த 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இருந்து தற்போது இருவரும் விடுதலையாகியுள்ளனர்.

துரைமுருகனுக்கு சொந்தமான சென்னை மற்றும் காட்பாடி பகுதியிலுள்ள வீடுகள், கல்லூரி மற்றும் அலுவலகங்கள் என 9 இடங்களில் கடந்த 2011ம் ஆண்டு, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.40 கோடி சொத்து குவித்ததாக கடந்த 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு வேலூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி துரைமுருகன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக நேற்று வேலூர் நீதிமன்றத்தில் வாதம் நடைபெற்றது.

 இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தட்சிணாமூர்த்தி இந்த வழக்கில் இருந்து துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துகுவிப்பு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.