February 16, 2017
எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் கருணாஸ் நிலைமை, இப்படியா ஆகணும்?
கருணாஸ் தேவர் சமூகத்தை சேர்ந்தவர் என்று சொல்லிக்கொண்டு, ஒரு சின்ன அமைப்பை ரெடி செய்தார். தேவர் ஜெயந்தி அன்று போஸ்டர்கள் ஓட்டுவார். படங்களிலும் நடித்துக்கொண்டு இருந்தார். திடீர் என்று அதிமுக சார்பில் திருவாடானை தொகுதியில் நின்றார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்காக போடப்பட்ட ஓட்டுக்கள். இவர் ஜெயித்து எம்.எல்.ஏ ஆனார்.
சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை வாழ்த்தி பாடினார். ஆனால், அவர் இறந்த அன்று சிரித்துக்கொண்டே செல்பி எடுத்தார். ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கட்சியின் பொதுச்செயலாளர் ஆனதும், அவர் தான் எனக்கு எல்லாம் என்றார்.
இப்போது முதல்வராக அறுதி பெரும்பான்மை நிரூபிக்க சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் ஒரு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கருணாஸ் தொடக்க நாட்களில், ஜாலியாக பாட்டு பாடி கொண்டு இருந்தாராம். அப்புறம் நாலைந்து நாட்களில் கொஞ்சம் ஹோம் சிக் வந்துடுச்சாம். தப்பி வெளியேற முயன்றார் என்று கூட செய்திகள் வந்தது. ஆனால், யாரிடமும் பேசாமல், தன் அறையிலேயே எப்போது, வாக்கெடுப்பு நிகழும் என்று காத்து கிடக்கிறாராம் கருணாஸ்.
மற்ற எம்.எல்.ஏ க்களும் இவரிடம் பேசுவது கிடையாதாம். பன்னீர் பக்கம் சாய்வாரோ என்று ஒரு சந்தேகம் அவர்களுக்கு இருக்காம்.
எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் கருணாஸ் நிலைமை, இப்படியா ஆகணும்?
Reviewed by மறத்தமிழன்
on
February 16, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.