Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 15, 2017

பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு அதற்குரிய இழப்பீடு எப்போது கிடைக்கும்-விவசாயிகள் எதிர்பார்ப்பு


கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் மிக குறைந்த அளவு மகசூல் கிடைத்துள்ளது. ஏற்கனவே பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு அதற்குரிய இழப்பீடு எப்போது கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்து விட்டதால் சம்பா நெல் சாகுபடி செய்த விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர். கடலுார் மாவட்டத்தில் 17க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். தமிழக அரசு, காவிரி டெல்டா பகுதிகளில் நடவு செய்த நெற்பயிரை காப்பாற்ற முடியாத நிலையால் தமிழக அரசு வறட்சி மாநிலமாக அறிவித்தது. காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையும் மற்ற மாவட்டங்களில் விவசாயிகள் செய்துள்ள பயிர் காப்பீட்டுத் தொகை வழக்கம் போல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி காவிரி டெல்டா பகுதிகளில் இழப்பீட்டுத் தொகைக்காக கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. எக்டர் ஒன்றுக்கு நெல்லுக்கு 13 ஆயிரத்து 500 ரூபாயும், மற்ற பயிர்களுக்கு ஒரு எக்டருக்கு 7,500 ரூபாயும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன்படி இது வரை இழப்பீட்டுத்தொகை வழங்கப்படவில்லை.
மாவட்டத்தில் 9 ஒன்றியங்கள் வறட்சி பகுதியாக அறிவித்து அதற்காக நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இன்னும் நிவாரணம் வழங்கியபாடில்லை. விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, கம்மாபுரம், திட்டக்குடி போன்ற பகுதிகளில் நிலத்தடி நீரை வைத்து நடவு செய்து நெற்பயிரை காப்பாற்றி வந்தனர். தற்போது, நெல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதில் விளைச்சல் குறைவான நெல்லுக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது.
ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை இந்த இழப்பீடு இருக்கும். இதற்கான கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது. கடலுார் மாவட்டத்தில் 3,500 வயல்களில் சோதனை நடத்த வேண்டியுள்ளது. இதில் இதுவரை 1500 வயல்களில் மட்டுமே சோதனை நடத்தப்பட்டுள்ளது. இன்னும் 2000 வயல்களில் சோதனை நடத்தி முடித்த பின்னரே இழப்பீடு வழங்கப்படும். இந்த சோதனை மிகவும் காலதாமதமாக நடந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, மத்திய காப்பீட்டுத்துறை அதிகாரிகள் விரைவில் சோதனை நடத்தி விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.