February 18, 2017
திருமண ஆசைக்காட்டி மாணவியை சீரழித்த கொடூரம்!
(இச்சம்பவத்தில் வரும் பெயர்கள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)
கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் ஒரு கட்டிட தொழிலாளி. அவரது ஊர் அருகேயுள்ள சுற்றுவட்டார பகுதிகளில் வேலைக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த மாணவி கீதா. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கண்ணன் வீட்டு வழியாக பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.
அப்போது கண்ணன் தனது காதல் வலையை கீதா மீது வீசியிருக்கிறார். கீதாவும் கண்ணனின் காதல் வலையில் விழுந்திருக்கிறார். இருவரும் காதல் வானில் சிறகடித்து பறந்திருக்கிறார்கள்.
இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்கள் காதலை வளர்த்துள்ளனர். இந்நிலையில் கண்ணன் திருமணம் செய்தால் உன்னை தான் திருமணம் செய்வேன் என்று காதல் வசனம் பேசியிருக்கிறார்.
கண்ணனின் கபட நாடகத்தை அறியாத கீதா, அவனது ஆசை வார்த்தையை நம்பி ஏமாந்திருக்கிறார். இப்படியே பல தடவை கீதாவுடன் உல்லாசமாக இருந்திருக்கிறான் கண்ணன்.
இதனிடையே கீதாவிற்கு கண்ணன் உடனான பழக்கம், கீதாவின் பெற்றோருக்கு தெரிய வந்திருக்கிறது. அவர்கள் கீதாவிடம் விசாரித்ததில் நடந்த எல்லாவற்றையும் கூறியிருக்கிறாள்.
இதனையடுத்து கண்ணனிடம் கீதாவின் பெற்றோர் கேட்டதற்கு எனக்கு ஒன்று தெரியாது என்பது போல் பதிலளித்திருக்கிறான். இதனால் அதிர்ச்சியடைந்த கீதா மற்றும் அவளது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.
வழக்குப்பதிவு விசாரித்த போலீசார் தலைமறைவான கண்ணனை வலைவீசி தேடி வருவதாக கூறப்படுகிறது.
திருமண ஆசைக்காட்டி மாணவியை சீரழித்த கொடூரம்!
Reviewed by மறத்தமிழன்
on
February 18, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.