Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 27, 2017

பாஜக மாணவர் அமைப்பை எதிர்த்ததால் பலாத்கார மிரட்டல்... கார்கில் மாவீரரின் மகளுக்கு நேர்ந்த கதி


பாஜக மாணவர் அமைப்பை எதிர்த்ததால் தமக்கு பலாத்கார மிரட்டல்கள் வருவதாக டெல்லி மாணவி பகீர் புகார் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.க்கு எதிராக பிரசாரம் செய்ததால் தமக்கு பலாத்கார மிரட்டல் வருவதாக டெல்லி பல்கலைக் கழக மாணவியும் கார்கில் போரில் உயிர்நீத்த மாவீரர் கேப்டன் மன்தீப் சிங் மகளுமான குர்மேகர் கவுர் திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி இந்த நாட்டை அழித்துவிடும். பாஜக குண்டர்களுக்கு எதிராக ஒவ்வொருவரும் போராட வேண்டும்.
பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்வதால் நிறைய மிரட்டல்கள் வருகின்றன. என்னை பலாத்காரம் செய்யப் போவதாகவும் கூட மிரட்டுகின்றனர்.

இவ்வாறு குர்மேகர் கவுர் தெரிவித்துள்ளார்,
தம்முடைய ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களிலும் தாம் ஏபிவிபி குறித்து அச்சப்படுவதாகவும் தாம் தனி நபர் அல்ல; எனக்கு பின்னால் ஒட்டுமொத்த இந்திய மாணவர் சமூகம் இருக்கிறது என்ற பதாகையை ஏந்திய போட்டோவையும் குர்மேகர் கவுர் வெளியிட்டுள்ளார்.

 தேசத்துரோகி பட்டம்:
இது குறித்து அவர், தனக்கு வரும் மிரட்டல்கள் குறித்து பயப்படவில்லை என்றும், தனது தந்தை நாட்டிற்காக குண்டுகளை நெஞ்சில் சுமந்ததுபோல் தானும் நாட்டிற்காக தனது உயிரைக் கொடுக்க தயாரக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர், அனைத்து மாணவர்களும் ஏபிவிபியினரின் வன்முறைக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும் என்றார்.

அவர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தக் காரணத்திற்காக தன்னை தேச விரோதி என அவர்கள் அழைப்பதாகவும், மற்றவர்களுக்கு தன்னுடைய தேசப்பற்றை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.