Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 16, 2017

சபதம் போட்டு 'தாதா' முகத்தை சசிகலா காட்டியபோது நடுநடுங்கிப் போன வளர்மதி


சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா சபதம் போட்டு தாம் பெண் தாதா என்பதை வெளிப்படுத்திய போது அருகே இருந்த முன்னாள் அமைச்சர் வளர்மதி வெலவெலத்துப் போனவராக இருந்தார்.
அதிமுகவில் போல்டான பெண்மணிகளில் ஒருவராக நெட்டிசன்களால் கலாய்க்கப்படுபவர் முன்னாள் அமைச்சர் வளர்மதி. ஜெயலலிதாவின் அதிதீவிர விசுவாசியாக தம்மை காட்டிக் கொண்டு வேப்பிலை ஆடை உடுத்துவது, மண் சோறு சாப்பிடுவது, தீச்சட்டி எடுப்பது என ஏகத்துக்கும் அலம்பல் காட்டியவர்.
ஜெயலலிதா மறைந்தபோது சகஜமான நிலையில் வளர்மதி சிரித்துக் கொண்டே இருந்தது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தீவிர சசிகலா ஆதரவாளராக மாறிப் போனார் வளர்மதி.
சசிகலாவோ முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் வெறித்தனமாக ஒரு பெண் தாதாவைப் போல செயல்படுகிறார் என தமிழக காங். கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருந்தார். அதை இன்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வெளிப்படுத்தினார் சசிகலா.
பெங்களூரு சிறைக்குப் போவதற்கு முன்னர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு போய் 3 முறை சமாதியில் ஓங்கி அடித்து சத்தியம் செய்து தாதாவை போலவே ஆவேசமாக சபதமெடுத்துக் கொண்டார். அப்போது யாரையோ அழிப்பேன் என்றெல்லாம் முணகினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.