புத்தர் சீடர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருவர் அவர்களைக் கடந்து சென்றனர். அதில் ஒருவன் “ அந்த காலத்தில் நான் எப்படி இருந்தேன் தெரியுமா? இனி வசந்தம் வருமா தெரியவில்லையே “ என்று வருத்தப்பட்டுக் கொண்டான். இது அவர்களின் காதில் விழுந்தது. அப்போது புத்தர் சீடர்களிடம் “ மனிதனின் வாழ் நாள் எவ்வளவு தெரியுமா?’ என கேள்வி கேட்டார். ஒரு சீடர் அறுபது ஆண்டு என்றார். இன்னொருவரோ அதெப்படி சிலர் எழுபது எண்பது ஆண்டுகள் கூட இருக்கிறார்களே என்று மறுத்தார். இப்படி ஆளாளுக்கு பதில் சொல்ல புத்தர் இடைமறித்தார்.“மனிதர்கள் தற்போது எப்படி வாழ்கிறார்கள் தெரியுமா? சிலர் கடந்த காலத்தை சிந்தித்து கவலையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். சிலர் எதிர்காலம் குறிந்த கற்பனையில் ஏங்கித் தவிக்கிறார்கள். அதனால் நிகழ்காலத்திக் கோட்டை விடுகிறார்கல். நிகழ்காலத்தில் விழிப்புடன் இருப்பவனே நிறைவுடன் வாழ்கிறான் நிகழ்காலமே அவன் வாழும் காலம் “ என்றார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.