கிழக்கு கடற்கரை ரிசார்ட்டுக்கு சென்ற அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக எம்.எல்.ஏக்களிடம் கையெழுத்து வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கூவாத்தூர் ரிசார்ட்டுக்கு சென்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அங்கு அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக கையெழுத்து வாங்கியதாக தகவல்கள் வெளியாக மன்னார்குடி கோஷ்டி அதிர்ந்து போயுள்ளதாம்.
அதிமுக எம்.எல்.ஏ.க்களில் ஒரு பகுதியின் கூவாத்தூர் ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று இந்த எம்.எல்.ஏக்களை சந்திக்க அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சென்றனர்.
சிறிதுநேர சந்திப்புக்குப் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ஜெயக்குமார் எங்கே சென்றார் என தெரியவில்லையாம். அவரை தொடர்பு கொள்ள முடியாமல் மன்னார்குடி கோஷ்டி முழிக்கிறதாம்.
இதனிடையே ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் சிலரிடம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஜெயக்குமார் கையெழுத்தி வாங்கியதாகவும் உரிய நேரத்தில் முதல்வர் ஓபிஎஸ்ஸை அவர் சந்திப்பார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.