February 11, 2017
ஜெயலலிதா நினைவிடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த சசிகலா திட்டம்?
ஆட்சி அமைக்க தம்மை அழைக்க கோரி ஜெயலலிதா நினைவிடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ம்மை முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைக்க வலியுறுத்தி ஜெயலலிதா நினைவிடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து வைத்து தமக்கு ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் பொய் மனு கொடுத்துள்ளார் சசிகலா. இதனடிப்படையில் தம்மையே முதல்வராக பதவியேற்க அழைக்க வேண்டும் என சசிகலா வலியுறுத்தி வருகிறார்.
அதே நேரத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமோ தம்மை மிரட்டித்தான் ராஜினாமா கடிதம் வாங்கினார் சசிகலா என ஆளுநரிடம் முறையிட்டுள்ளார். இதனால் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா செய்வதறியாது வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகிறார். இதனிடையே சசிகலாவால் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து தப்பி ஓட முயற்சித்தனர்.
இதையடுத்து சசிகலா நேரடியாக கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்று எம்.எல்.ஏக்களை சந்தித்து பேசி வருகிறார். இச்சந்திப்புக்குப் பின்னர் எம்.எல்.ஏக்களுடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Sources said that ADMK Interim General Secretary Sasikala will go to fast at Jayalalithaa memorial at Marina.
தம்மை முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைக்க வலியுறுத்தி ஜெயலலிதா நினைவிடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா நினைவிடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த சசிகலா திட்டம்?
Reviewed by மறத்தமிழன்
on
February 11, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.