Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 19, 2017

திமுக வன்முறை கட்சி.. சசிகலாவே பரவாயில்லை.. பொர்க்கி சு.சாமி குற்றச்சாட்டு


திமுக தேசவிரோத மற்றும், வன்முறை கட்சி என்று சசிகலா ஆதரவாளரான சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.,
சட்டசபையில் இன்று நடைபெற்ற அமளிக்கு நடுவே ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பாஜக ராஜ்யசபா எம்.பியும், சசிகலா ஆதரவாளருமான சு.சாமி கூறுகையில்,

திமுக தேச விரோத மற்றும் வன்முறை கட்சி. திமுகவைவிட சசிகலா பரவாயில்லை என்று தெரிவித்துள்ளார். சசிகலாவை எப்படியாவது தமிழக சிறைக்கு அழைத்துவர வேண்டும் என்று விரும்பி லாபி செய்து வருகிறார் சு.சாமி. எனவே சமயம் கிடைக்கும்போதெல்லாம் சசிகலாவை புனிதப்படுத்தி பேச முற்படுகிறார் சு.சாமி.

மேலும், இந்த ஆட்சி கலைந்துவிடக்கூடாது என்ற அதி தீவிர அக்கறையால் அவசரமாக சு.சாமி பேட்டியளித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று செய்தி சேனல் தொகுப்பாளர்கள் கூறுகிறார்கள். அவர்கள் முட்டாள்கள். பொம்மை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு இதுபோன்ற நடவடிக்கையை தடுக்கிறது. சபாநாயகர் விருப்பப்படி சபையை நடத்தலாம்.

தேச விரோத திமுகவின் குண்டாயிசம்தான் சட்டசபையில் வெடித்துள்ளது. தேசபக்தியற்ற திமுக, ஊழல் காங்கிரஸ், கிறிஸ்தவ மதமாற்றுவாதிகள் ஆகியோர் ஓ.பி.எஸ்சுடன் கைகோர்த்திருந்தனர். அவர்களுக்குத்தான் இன்று இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அதேநேரம், 1988ல் சட்டசபையில் அமளி நடைபெற்ற மறு ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.